சமீபத்தில் கூகிள் ப்ளே ஸ்டோரில் சில மாற்றங்கள் வந்துள்ளன. சில காலம் முன்பு நடந்த சில மாற்றங்களை ஏற்கனவே எழுதியுள்ளேன். இப்பொழுது அதிலும் சில மாற்றங்கள். குறிப்பாய் உங்கள் மொபைலில் இருக்கும் செயலிகள் அதன் அப்டேட் இவற்றை காட்டுவதில்தான் இந்த மாற்றங்கள் வந்துள்ளன. அப்படி என்ன மாற்றங்கள் Google Play Store ல் வந்துள்ளன என்று பார்ப்போம். போன அப்டேட்டை பார்க்கையில் இதில் பெரிய மாற்றம் எதுவுமில்லை.
முன்பு ப்ளே ஸ்டோர் சென்றவுடன் , உங்கள் ப்ரொபைல் படத்தை டச் செய்தால் வரும் மெனுவில் “Manage Apps and Device ” டச் செய்தால் எந்த செயலிகளை அப்டேட் இருக்கிறதோ அவை லிஸ்ட் ஆகும். அங்கிருந்து அப்டேட் செய்துகொள்ளலாம்.
இப்பொழுது அதில் மாற்றம் வந்துள்ளது. இப்பொழுது அதற்கு பதில் கீழே இருக்கும் ஸ்க்ரீன் வரும். இதில் எத்தனை செயலிகள் அப்டேட் செய்யப்படாமல் இருக்கின்றன. உங்கள் மொபைலில் எவ்வளவு ஸ்டோரேஜ் இருக்கிறது போன்ற விவரங்கள் காட்டும். மேலும், இங்கிருந்து நேரடியாக உங்கள் மொபைலில் இருக்கும் செயலிகளை மற்ற மொபைல்களுடன் பகிர இயலும்.
இங்கிருந்து “Manage ” டேப் அழுத்தினால் மூன்று பில்டர்கள் காட்டும். Installed / Updates Available/ Games”. Updates Available பில்டர் உபயோகப்படுத்தினால், உங்கள் மொபைலில் எந்த எந்த செயலிகளுக்கு அப்டேட் இருக்கிறதோ அந்த செயலிகளும் அது எவ்வளவு இடம் எடுத்துக்கொள்ளும் என்பதையும் காட்டும்.