Clubhouse App open for Indian users – Android Version

இந்த மாத துவக்கத்தில் Clubhouse App ஆன்ட்ராய்ட் உபயோகிப்பாளர்களுக்கான தனது செயலியை வெளியிட்டது. அப்பொழுது அமெரிக்க உபயோகிப்பாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடிந்தது. இப்பொழுது அனைவரும் பயன்படுத்த முடியும். இது வாய்ஸ் சாட் ரூம். யார் வேண்டுமானாலும் எந்த ஒரு தலைப்பிலும் ஒரு சாட் ரூமை துவங்கி தன்னை பின்பற்றுபவர்களுடனோ இல்லை பப்ளிக் செட்டிங்கிலோ பேசலாம்.

ஆனால் யார் வேண்டுமானாலும் இதில் இணைய இயலாது.யாரவது ஒருவர் அவர்களை இன்வைட் செய்திருக்க வேண்டும். ஒருவர் ஐந்து பெயரை மட்டுமே இன்வைட் செய்ய இயலும். ஏற்கனவே நண்பர் என்னை இன்வைட் செய்திருந்தார். அதனால் இணைய முடிந்தது. இன்னும் இந்த செயலியை உபயோகிக்க ஆரம்பிக்கவில்லை. ஆனால் ஒரே ஒரு விஷயம் மட்டும். செயலியின் UI படு மோசமாக உள்ளது.

Clubhouse App செயலியை இன்ஸ்டால் செய்ய .சில ஸ்க்ரீன்ஷாட் கீழே

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.