Meta நிறுவனத்தின் பேஸ்புக் செயலியில் உபயோகிப்பாளர்கள் அவர்களுக்கேற்ற ” Avatar ” உருவாக்கிக் கொள்ளலாம். அதை பல்வேறு பதிவுகளில் பின்னூட்டம் அளிக்கும் பொழுதோ அல்லது நமது பதிவிலோ உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அதை போன்றே இப்பொழுது வாட்ஸ் அப் செயலியிலும் அவதார் உருவாக்கும் வசதியை Meta நிறுவனம் ( Create Avatar in Whatsapp ) அறிமுகம் செய்துள்ளது. அதை எப்படி செய்வது என்பது கீழே…
Create Avatar in Whatsapp
- வாட்ஸ் அப் செயலியில் settings பகுதிக்கு செல்லவும்
- அதில் ” Avatar ” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்
- அதன் பின் ஸ்க்ரீனில் வரும் ஆப்ஷன்களில் உங்கள் Avatar எப்படி இருக்க வேண்டும் என்று தேர்வு செய்யவும்
- இனி நீங்கள் மற்றவர்களுக்கு பதில் அளிக்கும் பொழுது அதற்கேற்ப இந்த அவதாரை ஸ்டிக்கராக உபயோகம் செய்துகொள்ளலாம்.
இதை உங்கள் அரட்டையில் உபயோகிக்க இடது பக்கம் இருக்கும் எமோஜி ஐக்கானை க்ளிக் செய்து , கீழே ஸ்டிக்கராதி தேர்வு செய்யவும்
இதில் முக்கிய விஷயம், இந்த வசதி வழக்கம் போல சில பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே வந்துள்ளது. மற்றவர்கள் காத்திருக்க வேண்டும்