வாட்ஸ் அப் செயலியில் நாம் படங்கள் அல்லது வீடியோ பகிரும் பொழுது அந்த படத்தின் கீழே நாம் “caption ” இணைத்து பகிரலாம். யாருக்கு பகிர்கிறோமோ அவர்கள் வீடியோ எதை பற்றியது என புரிந்து கொள்ள உதவும். ஆனால் இந்த வசதி மீடியா கோப்புகளை பகிரும் பொழுது மட்டும் உபயோகப்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது. இப்பொழுது நீங்கள் பகிரும் டாகுமெண்ட்களுக்கும் இந்த கேப்ஷன் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது . புதிதாய் ” Caption bar Documents sharing ” அறிமுகப்படுத்தியுள்ளார்கள்
Caption bar Documents sharing
நீங்கள் பகிர வேண்டிய டாகுமெண்டை வழக்கம் போல் சாட் விண்டோவில் சென்று இணையுங்கள்.
அதற்கு அடுத்த ஸ்க்ரீனில் நீங்கள் இணைத்த கோப்பிற்கு கீழே “Caption bar” காட்டும். அதில் நீங்கள் அந்த டாக்குமெண்டை பற்றிய சிறு அறிமுகத்தை இணைக்கலாம்.
இந்த வசதி வாட்ஸ் அப் பீட்டா 2.22.22.7 பதிப்பில் அறிமுகம் ஆகி உள்ளது. அனைவரது பொது பயன்பாட்டிற்கு வர சிறிது காலம் ஆகும்