- Whatsapp Desktop Beta – How to get it ?
- Whatsapp UWP app 2.2145.3.0 – Windows 10/11
- WhatsApp beta UWP 2.2201.2.0
- Dark mode for Whatsapp UWP Version
சில மாதங்களுக்கு முன்னால் வாட்ஸ் அப் நிறுவனம் விண்டோஸ் 10 மற்றும் விண்டோஸ் 11 இயங்குதளங்களில் மட்டுமே வேலை செய்யும் வாட்ஸ் அப் UWP செயலியை அறிமுகப்படுத்தியது அனைவருக்கும் தெரியும். அதில் ஒரு சில புதிய வசதிகளையோ இல்லை ஏற்கனவே ஆன்ட்ராய்ட் / ஐ ஓ எஸ்ஸில் உள்ள வசதிகளையோ புதிதாய் இங்கு அறிமுகப்படுத்திக் கொண்டு வருகிறது. ஆன்ட்ராய்ட் செயலியில் ஏற்கனவே டார்க் மோட் இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இப்பொழுது இந்த Whatsapp UWP Beta செயலியிலும் Dark Mode வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
How to enable Dark Mode ?
முதலில் windows store ஓபன் செய்து நீங்கள் சமீபத்திய பதிப்பை உபயோகிக்கிறீர்களா என உறுதி செய்துக் கொள்ளவும்.
பின்பு செயலியை துவக்கவும்.
- இடது பக்கம் உங்கள் சாட் லிஸ்ட் இருக்கும். அதன் மேற்புறம், செட்டிங்ஸ் ஐகான் இருக்கும். அதை க்ளிக் செய்யவும்.
- இப்பொழுது முதலில் “ General ” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
- அதில் “Theme ” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
- அதில் மூன்று விருப்பங்கள் இருக்கும்
- System Default / Light / Dark . இதில் ” Dark ” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
- இப்பொழுது வாட்ஸ் அப் செயலியை ரீ ஸ்டார்ட் செய்ய அனுமதி கேக்கும். ரீ ஸ்டார்ட் செய்த பிறகு நீங்கள் வாட்ஸ் அப்பை , டார்க் மோடில் உபயோகிக்கலாம்.