Dark mode in Notepad

Dark mode in Notepad – Windows 11

நோட்பேட் விண்டோஸ் 98ல் இருந்தே தொடர்ந்து இருந்தவரும் சில மென் பொருட்களில் ஒன்று. அப்பொழுது இருந்து இப்பொழுது வரை பெரிதாய் மாற்றமும் வந்ததில்லை. ஆனால் விண்டோஸ் 11 வந்த பிறகு இதிலும் ms paint மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். பெரிதாய் எந்த புதிய வசதியும் வரவில்லை எனினும், இந்த மாற்றங்கள் பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. விண்டோஸில் டார்க் மோட் முன்பே வந்து விட்டாலும், நோட்பேடில் டார்க் மோட் வர வில்லை. இப்பொழுது நோட் பேடிலும் அந்த வசதியை கொண்டுவந்துள்ளனர். இந்த பதிவில் Dark mode in Notepad எப்படி கொண்டுவருவது என பார்ப்போம்.

  1. ஸ்டார்ட் மெனு சென்று Notepad ஓபன் செய்துகொள்ளுங்கள்.
  2. இதில் மேல் வலது மூலையில் “settings icon” இருக்கும். அதை க்ளிக் செய்யுங்கள்
  3. இப்பொழுது செட்டிங்ஸ் மெனு வரும். இரண்டு ஆப்ஷன்கள் இருக்கும்.
  4. முதல் ஆப்ஷன் “App Theme ” அதன் அருகில் உள்ள அம்புக்குறியை க்ளிக் செய்தால் உங்களுக்கு மூன்று ஆப்ஷன்கள் காட்டும்
  5. “Light / Dark / Use System Setting “
  6. இதில் லைட் ஆப்ஷன் எப்பொழுதும் இருப்பது போல் காட்டும்
  7. “Use System Setting” ஆப்ஷன் சிஸ்டம் முழுவதும் என்ன ஆப்ஷன் தேர்வு செய்கிறீர்களோ அது
  8. Dark என்ற ஆப்ஷன் “ Dark Mode in Notepad “ கொண்டு வரும்
  9. அதன் கீழ் உள்ள ஆப்ஷன் உங்கள் font சைஸ் போன்ற ஆப்ஷன்களை தேர்வு செய்ய உதவும்

கீழே ஸ்க்ரீன் ஷாட் வழக்கம் போல

About Author