சமீப காலமாய் மொபைல்களில் அதிகம் பேர் விரும்பும் ஒரு வசதி “Dark Mode”. விண்டோஸ் 10ல் இந்த வசதி இல்லை. டிஸ்பிளே செட்டிங்ஸ் மூலம் இரவு நேரத்தில் தானாக டிஸ்பிளே மாற்றி கொள்ளும் வசதி மட்டும் இருந்தது. Dark Mode விண்டோஸில் எப்படி வேலை செய்யும் ? நேரடியாக மொபைல்களில் இருப்பது போல் விண்டோஸிலும் டார்க் மோட் வேலை செய்யுமா ? இந்தப் பதிவில் Dark Mode in Windows 11 பற்றி பார்ப்போம்.
பொதுவாய் விண்டோஸில் டெஸ்க் டாப் ஸ்க்ரீனில் இருந்து ரைட் க்ளிக் செய்தால் வரும் ஆப்ஷன்களில் மூலமே டிஸ்பிளே செட்டிங்ஸ் செல்வோம். விண்டோஸ் 11ல் செட்டிங்ஸ் மெனு மூலமும் செல்லலாம். ரைட் க்ளிக் செய்து அதில் வரும் “Personalize” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

இப்பொழுது “Personalize” ஸ்க்ரீன் வரும். இதில் உங்கள் டெஸ்க் டாப் ஸ்க்ரீன் பின்னணி படம் மாற்றுதல், லாக் ஸ்க்ரீனில் பின்னணி படம் மாற்றுதல் போன்ற விஷயங்களையும் செய்து கொள்ளலாம். இங்குதான் “Dark Mode in Windows 11” பார்க்கப்போகிறோம்.
விண்டோஸ் 11 லும் நேரடியாக டார்க் மோட் என்ற ஒரு விஷயம் இல்லை. இரண்டு விதமான தீம்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்று லைட் மற்றொன்று டார்க். இதில் டார்க் தீம் நீங்கள் தேர்வு செய்தால் உங்கள் கணிணி முழுவதுமே டார்க் மோடிற்கு மாறும். இன்னும் இது 100% சரியாக இல்லை என்று தோன்றுகிறது. ஆனால் டார்க் மோட் விரும்பிகளுக்கு இது பிடிக்கும். விண்டோஸில் இருக்கும் தீம் பிடிக்கவில்லையெனில், அதே ஸ்க்ரீனில் ” Themes “ ஆப்ஷன் மூலம், விண்டோஸ் ஸ்டோரில் இருந்து புது தீம்களை இலவசமாய் இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும்.


Other Screens with Dark Mode in Windows 11

