Enable Windows 11 theme in Chrome

This entry is part 8 of 15 in the series Browsers

விண்டோஸ் 11 அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அதில் இயங்கும் பெரும்பான்மையான மென்பொருட்கள் விண்டோஸ் 11 UI க்கு ஏற்றவாறு தங்களை மாற்றி வடிவமைத்துக்கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. சமீபத்தில் வாட்ஸ் அப் கூட விண்டோஸ்க்கு பொதுவான UWP செயலியை அறிமுகப்படுத்தியது. அதே போல் கூகிள் க்ரோம் ப்ரவுசரும் சில பல வசதிகளை மாற்றியுள்ளது. Windows 11 theme in Chrome வேலை செய்ய வேண்டுமென்றால் ஒரு செட்டிங் மாற்றம் மட்டும் நாம் செய்ய வேண்டும் . அது என்ன என்று பார்ப்போம். அதற்கு முன்பு கூகிள் க்ரோம் என்ன பதிப்பு என்பதை சரிபார்த்துக் கொள்ளவும்.

கூகிள் க்ரோம் பதிப்பை சரி பார்க்க

  1. கூகிள் க்ரோம் ப்ரவுஸரின் வலது மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை க்ளிக் செய்யவும் . பின்பு அதில் settings ஆப்ஷனை தேர்வு செய்யவும்
  2. பின்பு இடது பக்கம் இருக்கும் மெனுவில் ” About Chrome ” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்
  3. உங்கள் பிரவுசர் பதிப்பு 96 க்கு மேல் இருக்க வேண்டும்.
  4. அப்படி இல்லையெனில் அது தானாகவே அப்டேட் ஆகும் .

How to enable Windows 11 theme in Chrome ?

  1. க்ரோம் பிரவுசரில் chrome://flags என்று டைப் செய்யவும்
  2. இப்பொழுது வரும் விண்டோவில் “Windows 11 style menus” என்று தேடவும்
  3. இப்பொழுது அந்த ஆப்ஷன் காட்டும். அதன் வலது பக்கம் இருக்கும் டிராப் டவுன் மெனுவில் இருந்து ” Enabled ” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்
  4. பின் க்ரோம் பிரவுசரை ரீ ஸ்டார்ட் செய்ய சொல்லும்.
  5. ரீ ஸ்டார்ட் செய்த பிறகு பிரவுசர் மெனு UIல் மாற்றங்கள் இருக்கும்

இதற்கு ஸ்க்ரீன் ஷாட் கீழே

பி.கு : பெரிதாக மாற்றங்கள் இல்லை. இதை விண்டோஸ் 10 லும் செய்யலாம் என சொல்கிறார்கள். விண்டோஸ் 10 வைத்திருப்பவர்கள் சோதனை செய்து சொல்லவும்.

Series Navigation<< Google Chrome Password CheckerRansomware in the name of Edge Update >>

About Author