End to End Encrypted backup in Whatsapp

வாட்ஸ் அப் மெஸெஞ்சரில் உங்களுடைய உரையாடல்கள் என்க்ரிப்ட் செய்யப்பட்டது என்று அனைவருக்கும் தெரியும். அதே போல் நீங்கள் உங்கள் வாட்ஸ் அப் டேட்டாவை பேக் அப் எடுக்கும் பொழுது உங்கள் மொபைல் , ஆன்ட்ராய்ட் மொபைலாக இருக்கும் பட்சத்தில் பேக் அப் டேட்டா கூகிள் ட்ரைவிலும் , ஐ போனாக இருக்கும் பட்சத்தில் ஐகிளவுடிலும் சேமிக்கப்படும். ஆனால் அது என்க்ரிப்ட் பேக் அப் அல்ல. இப்பொழுது இதை மாற்றிEnd to End Encrypted backup” வசதியை கொண்டுவந்துள்ளனர்.

எப்படி இதை உபயோகப்படுத்துவது?

உங்கள் வாட்ஸ் அப் செயலியில் வலது மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை தொடவும்

அதில் “settings ” ஆப்ஷனை தேர்வு செய்யவும்

பிறகு “Chats ” என்ற ஆஃப்ஷனின் கீழ் “Chat history” ஆப்ஷனை தேர்வு செய்யவும்

பின் ” Chat backup ” என்பதை தொடவும்

இப்பொழுது உங்கள் திரையில் ” End to End Encrypted backup” என்ற ஆப்ஷன் காட்டப்பட்டு அதன் கீழ் “Off ” என்று இருக்கும். அதை கிளிக் செய்தால் இதுவரை உங்கள் கூகிள் ட்ரைவில் எவ்வளவு பேக் அப் சேமிக்கப்பட்டுள்ளது என்பது காட்டப்பட்டு அதன் கீழ் “Turn On “ என்ற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்யவும்

அடுத்து “Password” உருவாக்க சொல்லும்.password வேண்டாமெனில் நீங்கள் 64-Digit Encryption key உபயோகம் செய்யலாம். இரண்டில் எந்த ஆப்ஷனை தேர்வு செய்தாலும், அதை இடத்தில் சேமித்து வைக்கவும். ஏனெனில் இந்த பேக் அப்பை ரீ ஸ்டோர் செய்யும் சமயத்தில் இதை கேக்கும். மறந்துவிட்டால் அந்த பேக் அப்பை உபயோகம் செய்ய இயலாது.

அடுத்தடுத்த ஸ்க்ரீனில் பாஸ்வேர்ட் உருவாக்கியப்பின் உங்கள் வாட்ஸ் அப் பேக் அப் செய்யப்படும். இதன் ஸ்க்ரீன் ஷாட் கீழே

About Author