உபயோகிப்பாளர்களின் பிரைவசி பிரச்சனை தீர்க்க முடியாத ஒரு பிரச்சனையாக ஓடிக் கொண்டிருக்கும் ஒன்று. இதில் செயலிகள் அவர்கள் விருப்பத்திற்கேற்ப உபயோகிப்பாளர்களை ட்ரேக் செய்வதை தவிர்க்க சமீபத்தில் ரிலீசான iOS 14.5ல் ஒரு கண்ட்ரோலை கொண்டுவந்தது ஆப்பிள் நிறுவனம். App Tracking Transparency (ATT ) என்ற இந்த புதிய வசதியின் மூலம் ஒவ்வொரு செயலியும் Targetted Ads & மற்ற விளம்பரங்களை காட்ட உபயோகிப்பாளர்களின் அனுமதி பெற வேண்டும். இப்படி அனுமதி பெற வரும் ஸ்க்ரீனுக்கு முன்பு இப்பொழுது ஒரு புதிய ஸ்க்ரீன் மெசேஜ் வருகிறது. அதில் “Facebook & Instagram paid version” ஆகாமல் இருக்க டிராக் செய்ய அனுமதிக்குமாறு பேஸ்புக் கேட்கிறது.
கீழே அவர்கள் கொடுத்துள்ள மெசேஜ் மற்றும் ஸ்க்ரீன்ஷாட்
இது பேஸ்புக் மற்றும் மற்ற செயலிகளுக்கு மிகப்பெரிய சவால். Targetted Ads இல்லையெனில் அவர்களால் தொடர்ந்து இலவசமாக நடத்த இயலாது. அந்த கட்டத்தில் ஐபோன் உபயோகிப்பாளர்கள் “Facebook & Instagram paid version” உபயோகிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள் இல்லையெனில் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு மாற வேண்டியிருக்கும். இது தொடர்ந்து எப்படி போகிறது என பார்க்க வேண்டும்.