சமீப வருடங்களில் , ஆன்ட்ராய்ட் மொபைல் உபயோகிக்கும் பலரும் மூன்று அல்லது நான்கு வருடங்களில் தங்களது மொபைலை மாற்றி விடுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், புது ஆண்ட்ராய்ட் பதிப்பு , சமீபத்திய ப்ராசஸர் போன்றவையே. இருந்தாலும் இன்னும் பலரும் பழைய மாடல் போதுமென்று உபயோகம் செய்து வருகின்றனர். இருந்தாலும் கூகிள் ஆகட்டும் அல்லது மிகவும் புகழ்பெற்ற அதிகம் பேர் உபயோகிக்கும் வாட்ஸ் அப் போன்ற செயலிகள் ஆகட்டும், ஒரு கட்டத்திற்கு மேல் மிகவும் பழைய ஆன்ட்ராய்ட் பதிப்புகளுக்கு சப்போர்ட் தருவதை நிறுத்தி விடுகின்றனர். இந்த வரிசையில் இப்பொழுது Gingerbreadஆன்ட்ராய்ட் பதிப்பு உள்ள மொபைல்களில் Google to block Gmail & YouTube. இந்த Gingerbread பதிப்பு வெளிவந்து பதினோரு ஆண்டுகள் ஆகி விட்டது குறிப்பிடத்தக்கது. 2010 டிசம்பரில் இந்த பதிப்பு வெளிவந்தது.
ஒரு தளத்தில் ஆன்ட்ராய்ட் பதிப்பு வாரியாக எத்தனை சதவீதம் பேர் இன்னும் உபயோகிக்கின்றனர் என்று தகவல் உள்ளது. அந்த படம் கீழே தரப்பட்டுள்ளது.
இந்த Gingerbread ஆன்ட்ராய்ட் பதிப்பிற்கான சப்போர்ட்டை வாட்ஸ் அப் நிறுவனம் ஏற்கனவே நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது கூகிள் நிறுவனமும் தனது சப்போர்ட்டை நிறுத்தி விட்டது. அதாவது இனி இந்த மொபைல்களில் நீங்கள் உங்கள் ஜி மெயில் ஐடி மூலம் லாகின் செய்ய முயன்றால் “ username and password error ” வரும். நீங்கள் சரியான தகவல்களை கொடுத்திருந்தாலும் இந்த மெசேஜ் காட்டும்.
ஜிமெயில் மட்டுமல்ல , கூகிளின் மற்ற சேவைகளான ப்ளே ஸ்டோர், மேப், யூடியூப், கேலண்டர் போன்ற சேவைகளிலும் நீங்கள் லாகின் செய்ய இயலாது. நீங்கள் உங்கள் மொபைலில் ஆன்ட்ராய்ட் பதிப்பை அப்டேட் செய்ய வேண்டும். அநேகமாய் இதை செய்ய இயலாது. உங்கள் மொபைலுக்கு அப்டேட் வருவதாய் இருந்தால் இந்நேரம் வந்திருக்கும். எனவே நீங்கள் மேலே கூறிய சேவைகளை தொடர்ந்து பெற வேண்டுமானால் புதிய மொபைலுக்கு மாற வேண்டும். இல்லை வெறும் பேசுவதற்கு மட்டுமே போனை உபயோகித்தால், இப்போதுள்ள மொபைலை தொடர்ந்து உபயோகித்துக் கொள்ளலாம்.