பேஸ்புக்கில் நம் பதிவுகளுக்கு வரும் ரியாக்ஷன் / லைக் எவ்வளவு என்று ஒவ்வொரு பதிவிலும் காட்டும். முன்பு இதை மாற்ற வழியில்லாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது நீங்கள் விரும்பினால் உங்கள் பதிவுகளில் இதை மறைக்கலாம். அதே போல் மற்றவர் பதிவுகளை நீங்கள் பார்க்கும் பொழுது அங்கே இந்த ரியாக்ஷன்களின் எண்ணிக்கையை மறைத்து வைக்கலாம் ( உங்களுக்கு மட்டும் காட்டாது). இந்த “Hide number of reactions” எப்படி செய்வது என பார்க்கலாம். இதில் நான் குறிப்பிட்டிருப்பது ஆன்ட்ராய்ட் செயலி / கணிணியில் இருந்து மட்டுமே. ஐ ஓஎஸ் செயலிக்கு ஸ்க்ரீன் ஷாட் பகிர்ந்தால் அப்டேட் செய்துவிடலாம்.
Using Android App
உங்கள் ஆன்ட்ராய்ட் செயலியில் வலது பக்கம் இருக்கும் மூன்று கோடுகளை தொடவும்
பின்பு “Settings & பிரைவசி” என்ற ஆப்ஷனை தேர்வு செய்து “settings” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும். பின்பு கீழே ஸ்க்ரோல் செய்து வந்து “Reaction Preferences” என்ற ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளவும்.
இப்பொழுது “Hide number of reactions” என்ற தலைப்பின் கீழ் இரண்டு ஆப்ஷன்கள் இருக்கும். முதல் ஆப்ஷன் அடுத்தவர்கள் பதிவில் ரியாக்ஷன்களின் எண்ணிக்கையை நீங்கள் பார்க்காமல் இருக்க. இரண்டாவது உங்கள் பதிவில் ரியாக்ஷன்களின் எண்ணிக்கையை மற்றவர்கள் பார்க்காமல் இருக்க.
இதற்குண்டான படங்கள்
ரியாக்ஷன்களின் எண்ணிக்கையை மறைக்காமலும் / மறைத்தும்
Using Computer
இதே செட்டிங் கணிணியில் மாற்ற விரும்பினால்
பேஸ்புக் முகப்பில் இருந்து வலது மேல் பக்கம் இருக்கும் சிறிய அம்பு குறியை க்ளிக் செய்யவும்
பின்பு “settings & Privacy” ஆப்ஷனை க்ளிக் செய்யவும். அடுத்து “news feed preferences “ என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.