விண்டோஸ் 10 வந்ததில் இருந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முயன்று கொண்டிருக்கும் விஷயம் ஆண்ட்ராய்ட் / ஐஓஸ் போல் விண்டோஸிற்கும் ஒரு ஸ்டோர் உருவாக்குவது. உங்கள் கணிணியில் இருக்கும் அனைத்தும் செயலிகள் / மென்பொருட்கள் என அனைத்தும் அதன் மூலமே இன்ஸ்டால் செய்யப்பட்டு அதன் அப்டேட்களும் அந்த ஸ்டோர் வழியாக நடைபெற வேண்டும் என்பதே. இது 100 % சாத்தியம் ஆகுமா என்பது விவாதத்துக்குரிய விஷயம் என்றாலும் அந்த இலக்கை நோக்கி அந்த நிறுவனம் முன்னேறி வருகிறது. அதன் ஒரு முயற்சிதான் இப்பொழுது வந்திருக்கும் இந்த விஷயம் “Install Firefox from Windows Store “. இப்படி ஸ்டோர் மூலம் இன்ஸ்டால் செய்வதில் ஒரு நன்மை, ஒவ்வொரு மென்பொருளுக்கும் அதற்குரிய அதிகாரபூர்வ தளத்தை நாம் தேட வேண்டாம். விண்டோஸ் ஸ்டோர் மூலமே இன்ஸ்டால் ஆகி , அதன் மூலமே அப்டேட்டும் நடைபெற உள்ள முதல் பிரவுசர் Firefox. விண்டோஸ் 11 மட்டுமல்ல விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வைத்திருந்தாலும் நீங்கள் firefox ஐ விண்டோஸ் ஸ்டோர் மூலம் இன்ஸ்டால் செய்யலாம்.
How to Install Firefox from Windows Store ?
உங்கள் கணிணியில் ஸ்டார்ட் மெனுவை க்ளிக் செய்யவும்
windows store ஐக்கானை க்ளிக் செய்யவும்
இப்பொழுது மேலே இருக்கும் “Search Box “ல் Firefox என்று டைப் செய்து பின் வலது பக்கம் இருக்கும் lens ஐ க்ளிக் செய்யவும்.
இப்பொழுது வரிசையாக நெறய மென்பொருட்கள் அல்லது புத்தங்களை காட்டும். அதில் “Firefox ” பிரவுசரை பார்த்து க்ளிக் செய்யவும்
இப்பொழுது அது சம்பந்த்தப்பட்ட விஷயங்களை காட்டும்.
இந்த ஸ்க்ரீனில் இடது பக்கம் இருக்கும் “Get” என்ற ஆப்ஷனை அழுத்தவும்.
இப்பொழுது இன்ஸ்டால் ஆக துவங்கும்/
இடது பக்கம் கீழே ” Library ” என்ற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்தால் உங்கள் கணிணியில் எந்த எந்த மென்பொருட்களுக்கு அப்டேட் இருக்கிறதோ அதை காட்டும். இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.
படங்கள் கீழே