பொதுவாய் சமீப காலங்களில் மைக்ரோசாஃப்ட் தனது விண்டோஸ் பதிப்புகளுக்கு புது அப்டேட்கள் வழங்குவது செவ்வாய் அன்று செய்வது வழக்கம். ஆனால் இந்த முறை அதை மாற்றி இன்றுதான் அப்டேட் வந்துள்ளது. KB5004745 என்ற இந்த அப்டேட்டில் விண்டோஸ் 11 ரிலீஸ் செய்த பொழுது இருந்த சில பிரச்சனைகளை பிக்ஸ் செய்துள்ளனர். சில விஷயங்களை இன்னும் கொஞ்சம் விரிவு படுத்தியுள்ளனர்.
Windows Search after KB5004745 installed
இந்த அப்டேட் மூலம் விண்டோஸ் சர்ச் வசதியை மேம்படுத்தி உள்ளனர் என்றுதான் சொல்லவேண்டும். முன்பு சர்ச் ஐகானை கிளிக் செய்து உள்ளே சென்று தேட வேண்டும். இப்பொழுது சர்ச் ஐகான் மேல் கர்சரை வைத்தால் மூன்று ஆப்ஷன் வரும். மேலும், அவற்றிற்கு மேலே இருக்கும் சர்ச் பட்டனில் நீங்க தேட வேண்டிய விஷயத்தை டைப் செய்தால் , அது சர்ச் விண்டோவில் ஓபன் ஆகும்.
அடுத்தது “get Started “ என்ற ஆப்ஷன். இது பெரிய விஷயமில்லை. விண்டோஸ் 11ல் என்ன புதிதாய் உள்ளது என சொல்லுகிறது. சில ஆப்ஷன்களை தேர்வு செய்ய உதவுகிறது.
Fixes in KB5004745
பொதுவாய் விண்டோஸில் ஓபன் செய்து வைத்திருக்கும் அனைத்து விண்டோக்களையும் சிறியதாக்க ஸ்டார்ட் கீ + M உபயோகிப்போம். அதுமட்டுமில்லாது, விண்டோஸ் 10ல் கீழே தேதிக்கு அருகில் ஒரு சிறு பட்டன் இருக்கும் அதை அழுத்தினாலும் அணைத்து விண்டோக்களும் சிறியதாகி விடும். இது ஜூன் 24 வந்த விண்டோஸ் 11 அப்டேட்டில் வேலை செய்யவில்லை. இன்று வெளியாகி உள்ள அப்டேட்டில் இதை சரி செய்துள்ளனர்.
Right Click menu fixed
அதே போன்று விண்டோஸ் டெஸ்க் டாப்பில் ரைட் க்ளிக் மெனுவில் “Refresh ” ஆப்ஷன் முக்கியமானது. விண்டோஸ் 11 ரிலீஸின் பொழுது ரைட் கிளிக்கில் இந்த ஆப்ஷன் இல்லாமல் இருந்தது. “Refresh” ஆப்ஷனை உபயோகப்படுத்த “Show More option” ஆப்ஷனுக்கு செல்ல வேண்டி இருந்தது. அதையும் சரி செய்து மீண்டும் “Refresh” பட்டன் ரைட் க்ளிக் மெனுவில் கொண்டுவந்துள்ளனர்.
Known issues in Build 22000.65 / KB5004745
- Search panel may not open.
- Recent searches may not be displayed when you hover over the search icon
- Widgets panel may appear empty or use incorrect window size.
- Microsoft Store’s install button might not work.
- Windows Security app will incorrectly report that the device is unsupported.