நாம் ஜி மெயில் ஐடி உருவாக்கும் பொழுது நமக்கு மொத்தம் 15 ஜிபி இலவச ஸ்டோரேஜ் கிடைக்கிறது. இந்த 15 ஜிபி என்பது ஜிமெயில், கூகிள் ட்ரைவ் மற்றும் கூகிள் போட்டோஸ் என்ற மூன்றிற்கும் சேர்த்துதான். இரண்டு மாதம் முன்பு வரை கூகிள் போட்டோஸ் எடுத்துக் கொள்ளும் இதில் சேர்க்கப்படாமல் இருந்தது. ஆனால், இப்பொழுது கூகிள் போட்டோஸில் நீங்கள் சேமிக்கும் படங்களும் இந்த இலவச ஸ்டோரேஜில் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும். இந்த கட்டுரையில் எப்படி கூகிள் குடுக்கும் 15 ஜிபிக்குள் நாம் நிர்வகிப்பது என்பதை பார்ப்போம் (“Manage space using Google One” ).
முதலில் கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து கூகிள் ஒன் செயலியை இன்ஸ்டால் செய்துக் கொள்ளவும் அல்லது கணிணியில் இருந்து இந்த இணையதளத்திற்கு செல்லவும்.
செயலியின் முகப்பில் ” Freeup Account Storage ” என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.

இதற்கடுத்த ஸ்க்ரீனில் , மூன்று ஆப்ஷன்கள் வரும்.
- உங்கள் மெயிலில் அதிக இடத்தை ஆக்கிரமித்துள்ள மெயில்கள் ( Attachments
- உங்கள் கூகிள் ட்ரைவில் நீங்கள் சேமித்துள்ள கோப்புகளில் அதிக இடத்தை பிடித்துள்ள கோப்புகள்
- கூகிள் போட்டோவில் உள்ள போட்டோக்களில் அதிகம் இடம் பிடித்துள்ள படங்கள்.
நீங்கள் அதில் எது தேவை இல்லையோ அதை அழித்து தேவையான இடத்தை திரும்பப் பெறலாம். கீழுள்ள படங்களில் முதல் படத்தில் உள்ள இடத்திற்கும் கடைசி படத்தில் உள்ள இடத்திற்கும் வித்யாசம் பாருங்கள்..
Comments 1