Message Reactions

Message Reactions, Bigger file sharing and more….

“Meta” நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியில் தொடர்ந்து பல புதிய வசதிகளை செய்துவந்தாலும் இந்த வருடம் முக்கியமாக சில வசதிகளை கொண்டு வரவுள்ளது. அது குறித்து மார்க் ஜூக்கர்பேர்க் இன்று அவரது தளத்தில் அறிவிப்பு செய்துள்ளார். இவற்றில் சில ஏற்கனவே பீட்டா பதிப்பு வைத்திருக்கும் ஒரு சிலருக்கு மட்டும் இருக்கிறது. எனவே பெரும்பாலான உபயோகிப்பாளர்களுக்கு இவை புதிய வசதிகளே. Message reactions, whatsapp Communities,Large File Sharing, Bigger group calls போன்றவை முக்கிய வசதிகளாகும்.

Message reactions

வாட்ஸ் அப் பில் உங்களுக்கு வரும் மெசேஜ் அல்லது நீங்கள் இருக்கும் க்ரூபில் வரும் மெசேஜ்களுக்கு லைக் மட்டுமல்லாது அந்த மெசேஜை பொறுத்து தேவையான விருப்பக்குறி இடும் வசதி இப்பொழுது சோதனையில் உள்ளது. ஒரு சில பீட்டா உபயோகிப்பாளர்களுக்கு ஏற்கனவே இந்த வசதி வந்துள்ளது. அனைவருக்கும் வரவில்லை. இன்னும் சில மாதங்களில் இந்த வசதி அனைவருக்கும் வரும் என எதிர்பார்க்கலாம். இது குறித்து போன வருடம் நாம் வெளியிட்ட பதிவு இங்கே படிக்கலாம்.

Large File Sharing

தற்பொழுது இருக்கும் வசதி படி , அதிகபட்சமாக 16 எம் பி அளவுள்ள படங்கள் / வீடியோ / டாகுமெண்ட் மட்டுமே பகிர முடியும். அதற்கு மேல் என்றால் முடியாது. தற்பொழுது இதை மாற்ற உள்ளது வாட்ஸ் அப். இதை தற்சமயம் அர்ஜென்டீனாவில் சோதித்து வருகிறது. அதாவது 2 ஜி பி வரையிலான கோப்புகளை பரிமாற்றம் செய்ய அனுமதிக்க உள்ளனர். அங்கே சோதனை ஓட்டம் முடிந்தவுடன் மற்ற நாடுகளுக்கும் படிப்படியாக வரும்.

Bigger group calls & New group size

இப்பொழுது ஒரு வாட்ஸ் அப் க்ரூபில் அதிகபட்சமாக 256 பேர் இருக்க இயலும். அதற்கு மேல் உறுப்பினர்களை சேர்க்க இயலாது. இதுவே இந்த வருட இறுதிக்குள் மாறலாம். அட்மின் உபயோகிப்பாளர்களுக்கு க்ரூப் மேனேஜ் செய்ய இன்னும் பல வசதிகளை கொண்டு வந்துவிட்டு இதை மாற்றுவார்கள்.

அதே போல் க்ரூப் வாய்ஸ் கால்களில் அதிகபட்சமாக இது வரை 8 பேர் மட்டுமே பங்குபெற இயலும் என்ற நிலை உள்ளது. இதை மாற்றி 32 பேர் வரை அனுமதிக்க உள்ளனர்.

இதே போன்று ஒருவர் க்ரூப்பில் இருந்து வெளியேறுகையில் அந்த க்ரூபில் மெசேஜ் வரும் இந்த நபர் வெளியேறி விட்டார் என்று. இதை மாற்றி எந்த வித மெசேஜும் இல்லாமல் வெளியேறும் வசதியும் வர உள்ளது.

இது தவிர்த்து வாட்ஸ் அப் கம்மியூனிட்டி என்ற ஒன்றை கொண்டு வர உள்ளார்கள். அதன் நோக்கம் என்னவென்று புரிபடவில்லை. எனவே அதைப் பற்றி விரிவாய் எழுதவில்லை. படிக்க நினைப்பவர்கள் இங்கே படிக்கலாம்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.