வாட்ஸ் அப் செயலியில் கடந்த ஒரு வருடமாக பலவித புதிய வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதை தவிர, விண்டோஸ் 10 /11 க்கான செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பொழுது ஏற்கனவே வெகு நாட்களாக சோதனையில் இருக்கும் ஒரு புதிய வசதி பற்றிய அப்டேட் தரப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆண்டிராய்டு மொபைல்களுக்கான செயலியின் பீட்டா பதிவில் தவறுதலாக வெளியான வசதிதான் இந்த “Message Reactions”.
அதாவது இப்பொழுது உங்களுக்கு விருப்பமான மெசெஜ்க்கு ஸ்டார் போடும் வசதி மட்டுமே உள்ளது. பேஸ்புக்கில் உள்ளது போன்று லைக் அல்லது வேறு ரியாக்ஷன் எமோஜி போடும் வசதி இல்லை. இது ரொம்ப நாளாக பலரும் எதிர்பார்க்கும் வசதி. சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ் அப் ஆன்ட்ராய்ட் பீட்டா செயலியில் தவறுதலாக வெளியானது. அப்பொழுதே அது முழுவதும் வேலை செய்யவில்லை. பின்பு அதை நீக்கி விட்டார்கள். அந்த வசதி மீண்டும் எப்பொழுது வரும் என்ற தகவல் இல்லை.
இந்நிலையில் வாட்ஸ் அப் டெஸ்க் டாப் பீட்டா பதிவில் இந்த வசதி சோதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து Wabeta தளம் தகவல் வெளியுட்டுள்ளது. அதன்படி உங்களுக்கு வரும் மெசேஜ்களுக்கு நீங்கள் விருப்பக் குறி இட முடியும். ஆனால் இது சரியாக எப்படி வேலை செய்கிறது என தெரியவில்லை. சில சமயம் மெசேஜ் மேல் கர்சரை வைத்தால் ரியாக்ஷன் ஆப்ஷன் வருகிறது. பல சமயம் வருவதில்லை. எனவே இந்த வசதி முழுமையாக வரும்வரை காத்திருக்க வேண்டியதுதான்.
அதே போல் நீங்கள் “message Reaction “ செய்திருப்பதை அந்த சாட்டில் உள்ள அனைவரும் பார்க்க இயலும். கீழே இரண்டு திரை சுட்டிகள்

