MS Paint redesigned and Android Support in Windows 11

விண்டோஸ் முதல் பதிப்பு வந்ததில் இருந்து இன்னும் தொடர்ந்து இருக்கும் ஒரு சில மென்பொருட்களில் MS Paint முக்கியமான ஒன்று. விண்டோஸ் 10 வந்த புதிதில் இந்த மென்பொருளை நீக்கி விட்டு அதற்கு பதில் paint 3D என்ற மென்பொருளை அறிமுகப்படுத்த முயன்றது மைக்ரோசாப்ட். ஆனால் அதற்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை என்பதால் இரண்டையுமே வைத்திருந்தது அந்நிறுவனம். ஆனால் Windows 11 ல் பெயிண்ட் 3D வேண்டுமென்றால் நிறுவிக்கொள்ளலாம் என்று மாற்றப்பட்டுவிட்டது.

அதே சமயம் MS Paint மென்பொருளை சிறிது மேம்படுத்தியுள்ளது. அதன் UI சிறிய அளவில் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாய் மேலே இருக்கும் டூல் பார், பிறகு மெனுவில் சில சிறிய மாற்றங்கள் என மாற்றங்கள் வந்துள்ளது. அதன் படங்கள் கீழே

  1. பழைய Save as மெனு Vs புதிய மெனு

படத்தின் மேல் க்ளிக் செய்தால் முழுதும் காட்டும்

2. டூல் பார் மெனுவில் மாற்றங்கள்

MS Paint

Windows 11 ல் பெரும்பாலோனர் பெரிதும் எதிர்பார்த்த புதிய வசதி Android Support. அதாவது வேறு எந்தவித மென்பொருள் தேவையின்றி விண்டோஸ் 11ல் ஆண்ட்ராய்ட் செயலிகளை உபயோகிக்கும் வழி. ஆனால் இந்த Android Support in Windows 11 வர 2022 ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் முதல்கட்ட சோதனை செய்பவர்களுக்கே இந்த வசதி வரவில்லை. எனவே இந்த வருடம் இந்த வசதி வராது. இப்படித்தான் இருக்கும் என ஒரு ஸ்க்ரீன்ஷாட் வந்துள்ளது. அது கீழே

Android Support in Windows 11

Windows 11 பற்றிய அனைத்து பதிவுகளையும் படிக்க

About Author