New Start Menu in Windows 11

Start menu

மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் 95ல் இருந்து விண்டோஸ் 10 வரை மாற்றாத ஒரு விஷயமாக இருந்தது Start Menu. விண்டோஸ் 8ல் மட்டும் மாற்றப்பட்டிருந்தது. ஆனால் விண்டோஸ் 8 அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை என்பதே உண்மை. Windows 11 அறிமுகமானதில் இருந்தே அதிகம் பேசப்படும் விஷயம் ஸ்டார்ட் மெனு ஸ்க்ரீனின் நடுவிற்கு மாறி இருப்பதே. அதே போல் விண்டோஸ் 10ல் ஸ்டார்ட் மெனுவில் லைவ் டைல்ஸ் என்று வைத்து சொதப்பி இருந்தார்கள். இதில் அது இல்லை. ஆனாலும் இவர்கள் காட்டும் “Pinned Apps ” வழக்கம் போல் தேவையற்ற ஆணிதான் .

இதில் ஒரு ட்ரிக். இந்த நடுவில் இருக்கும் “Start Menu” பிடிக்கவில்லையா ? பழையபடி இடது பக்கம் வேண்டுமா? மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் செய்யவேண்டியது இதுதான்.

Settings சென்று அங்கிருந்து “Personalization” செல்லுங்கள்.

அதில் “Taskbar” தேர்ந்தெடுக்கவும். அதில் “Taskbar Behaviors” செல்லவும்.

அதில் “Taskbar Alignment” என்ற ஆப்ஷனில் ” center / Left ” என்ற ஆப்ஷனில் left தேர்வு செய்யவும். இனி ஸ்டார்ட் மெனு இடது ஓரத்தில் வரும்.

About Author