பொதுவாய் வாட்ஸ் அப் செயலியில் நீங்கள் உங்கள் நண்பர்களுடனான சாட் விண்டோ ஓபன் செய்தால், விண்டோவின் மேல் அவருடைய பெயரும், அதன் கீழ் அவர் ஆன் லைனில் இருக்கிறாரா இல்லை கடைசியாக எப்பொழுது ஆன்லைனில் இருந்தார் போன்றவை காட்டப்படும். இதை சிலர் பிரைவசி செட்டிங்கில் சென்று மறைத்து வைக்கலாம். அப்படி மறைக்கவில்லையெனில் கீழே இருக்குமாறு காட்டும். ஆனால் இந்த “Online Status hidden” பண்ண வேறு ஆப்ஷன்கள் இல்லை.
நேற்றைய வாட்ஸ் அப் பீட்டா (2.21.13.17) அப்டேட்டிற்கு பிறகு, நீங்கள் வாட்ஸ் அப் பிஸ்னஸ் அக்கவுண்ட்களின் ஆன்லைன் ஸ்டேட்டஸ் பார்க்க இயலாது. அந்த நம்பருக்கு கீழே “Business Account ” என்ற தகவல் மட்டுமே வரும். இது சாதாரண வாட்ஸ் அப் அக்கவுண்டிற்கும் அப்டேட் ஆகுமா எனக் கேட்டால் தெரியாது என்பதுதான் பதில்.
இதனால் அந்த பிஸ்னஸ் அக்கவுண்ட் உபயோகிப்பவர் ஆன்லைனில் உள்ளாரா இல்லையா என தெரியாது. பிரைவசி ஆப்ஷனை உபயோகப்படுத்தாமலேயே ஆன்லைன் ஸ்டேட்டஸை ஹைட் பண்ணிக்கொள்ளலாம்.