பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் வாட்ஸ் அப் செயலி இப்பொழுது இன்னுமொரு புதிய வசதியை கொண்டுவந்துள்ளது. இந்த வசதி இப்பொழுது சில பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் வந்து இருந்தாலும் விரைவில் அனைவருக்கும் வரும் என எதிர்பார்க்கலாம். நீங்கள் வாட்ஸ் அப் செயலியின் மூலம் செய்யும் வீடியோ அழைப்புகளில் இசையை பகிர்ந்து கொள்ளும் ” Share music in audio & video calls ” இந்த புதிய வசதி.
Share music in audio & video calls
உங்களுக்கு வீடியோ அழைப்பு செய்யும் நபர் , அவருடைய அலைபேசியின் திரையை பகிரவேண்டும் முதலில். அதன் பின் அவருடைய அலைபேசியில் அவர் இசையை ஒலிக்க விட்டாலும் அல்லது வீடியோ பகிர்ந்தாலும் அந்த அழைப்பில் இருக்கும் அனைவரும் அதை பார்க்க கேட்க முடியும்.
இது குழு அழைப்புகளில் ( conference ) மட்டுமன்றி இருவருக்கு இடையேயான அழைப்புகளிலும் வேலை செய்யும் என சொல்கிறார்கள். இது தனிப்பட்ட வாட்ஸ் அப் செயலியில் மட்டுமின்றி whatsapp for business செயலியிலும் வேலை செய்யும் என கூறியுள்ளனர். எனவே நீங்கள் பீட்டா டெஸ்டர் எனில் இதை பரிசோதித்து பார்க்கலாம். ஆனால் இந்த புதிய வசதியால் என்ன உபயோகம் என என்று தெரியவில்லை.