வாட்ஸ் அப் செயலியில் புதிதாய் வரப்போகும் மாற்றங்களைப் பற்றி ஏப்ரல் மாதம் அந்த நிறுவனம் கூறியிருந்தது. அதை பற்றி நாம் ஏற்கனவே எழுதி இருந்தோம். அதில் கூறியிருந்த மெசேஜ் ரியாக்ஷன் ஏற்கனவே அனைவருக்கும் வந்து விட்டது. அந்த அப்டேட்டில் அவர்கள் முக்கியமாக கூறி இருந்த ஒரு விஷயம் ” Silently exit whatsapp groups “.
இப்பொழுது நீங்க இருக்கும் ஒரு வாட்ஸ் அப் குழுவில் இருந்து நீங்கள் வெளியேறுகிறீர்கள் என்றால், நீங்கள் வெளியேறியது அந்த குழுவில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். உங்கள் நம்பரை குறிப்பிட்டு இவர் இந்த குழுவை விட்டு நீங்கிவிட்டார் என்று காட்டும். இதற்கான ஸ்க்ரீன் ஷாட் கீழே
இப்பொழுது இந்த அறிவிப்பை மாற்றி இருக்கிறார்கள். அதாவது இனி யாரவது குழுவில் இருந்து வெளியேறினால், அந்தக் குழுவின் அட்மின்களுக்கு மட்டுமே அறிவிப்பு போகும். வேறு யாருக்கும் இந்த நபர் வெளியேறினார் எனக் காட்டாது. இந்த வசதி இன்னும் டெவலப்மென்ட்டில் தான் இருக்கிறது. எனவே பீட்டா சோதனையாளர்கள் உள்ளிட்ட யாருக்கும் இந்த வசதி இப்போது இல்லை. இன்னும் சிறிது நாள் காத்திருக்க வேண்டும். இதற்கான ஸ்க்ரீன் ஷாட்