சீராட்டி வளர்த்த பெண்ணை, ‘எங்கே அவளுடன் தன் குடும்ப செழுமையே கிளம்பிவிடுமோ’ என்ற அச்சத்தில்; அந்த பிள்ளை தன் பெண்ணை திருமணம் செய்துகொடுக்குமாறு கேட்கும்போது, தட்டிக் கழிப்பதற்காக “அவளுக்கு உப்பு போட்டுக்கூட சமைக்கத்தெரியாது” என்று பேயாழ்வார் கொடாக்கண்டனாய் மறுத்துச் சொல்லப்போக அவரோ விடாக்கண்டனாய் “பரவாயில்லை, நான் உப்பில்லாமலேயே சாப்பிடப் பழகிக்கொள்கிறேன்” என்று சொல்லி அவருக்கு வாய்ப்பூட்டு போட்டு ‘திரு’வைத்தட்டிக்கொண்டு வந்துவிட்டாரே!
Tag: வைஷ்ணவி
வைதேகி காத்திருக்கிறாள்
இவள் பேருந்தில் ஏறி வழக்கமாக நிற்குமிடத்தில் நின்று கொண்டாள். டிக்கெட் வாங்கி பத்திரப்படுத்தி கொண்டாள்.அதுவரை ஓடிக் கொண்டிருந்த பாடலிலிருந்து “கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு ” பாடல் மாற்றப்பட்டது. பின் நடுவில் “சிங்கப் பெண்ணே” பாடல் என மாறி மாறி ஓடியது. அவளுக்கு தெரியும் இந்த பாடல் தன் கவனத்தை ஈர்க்க நடத்துனர் செய்த வேலை தான் என்று. தினமும் நடக்கும் கூத்து தான் இது. முகத்தில் எதையும் தெரிந்த மாதிரி காட்டி கொள்ளாவிட்டாலும் உள்ளக்குள்ளேயே அந்த நடத்துனரை கலாய்த்துக் கொள்வாள். கண்ணா நீ என்னோட ஸ்கூல் டேஸ்ல என்ட்ட சிக்காம போய்ட்ட. அப்ப தெரியும் நான் யார்னு. நானே பெரிய ரவுடி டா அப்புறம் தாண்டா இதெல்லாம் போங்கடா போய் புள்ள குட்டிகள படிக்க வைங்க என்று சொல்லிக் கொள்வாள். ஆனால் இன்று எதையும் ரசிக்கும் நிலையில் வைதேகி இல்லை. மனம் முழுக்க கிருத்திக் தான் வியாபித்திருந்தான்.
தலைமுறை தாண்டிய நேசம்
இது எங்க வீட்டு விசேஷம் தான்.அம்மா சைடு. அதனால கல்யாண ஏற்பாட்ல ஏதாவது சில பொறுப்புகளை நாம செய்யனும்னு அம்மா சொன்னாங்க. இவங்க தான் என் அம்மா என அருகிலிருந்த முதிய பெண்மணியை காட்டினார். இவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. ஆனால் நினைவுக்கு வரவில்லை. அந்த அம்மா கிருஷ்ணாவிடம் நீ மேலேயே நின்னு என்ன வேணுமோ அத செய் என்றார்.
நேர்த்திக் கடன்
குழந்தையில்லாதவர்களை எப்படி நடத்துவார்களென்பதை என் குடும்பத்திலேயே பார்த்துள்ளேன்.நானும் கொஞ்சம் பருமனான உடல்வாகுடையவள்தான். போதாக் குறைக்கு பிட்னெஸ் ட்ரிங்க்களும் 30 நாட்களில் எடைக் குறைக்கலாம் முகாம்களும் அதிகமாக வரத் துவங்கிய வேளை அது. அவசரமாக சாலையைக் கடக்கும்போது, பேருந்தில் என்று எங்கு பார்த்தாலும் அந்த விளம்பர நோட்டிஸ்கள் வம்படியாக என் கைகளில் திணிக்கப்பட்டன. குண்டாக இருந்தால் குழந்தை பிறக்காது என வேறு கூறிச் சென்றனர். இதென்ன முருகா சோதனை. அப்படியொரு கஷ்டத்தை எனக்கு கொடுத்து விடாதே. எனக்கு நல்லபடியாக திருமணம் முடிந்து முதலில் நீயே வந்து பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.அப்படி பிறந்தால்………