Taskbar in Windows 11

விண்டோஸ் 10ஐ பொறுத்தவரை டாஸ்க் பாரில் ஒரே ஒரு ப்ரோக்ராம் மட்டுமே இருந்தது. பின்பு அதுவும் நீக்கப்பட்டுவிட்டது. விண்டோஸ் 10 வந்த புதிதில் “Cortona ” எனப்படும் விண்டோஸ் அசிஸ்டண்ட் இருந்தது. பின்பு அதுவும் வேண்டாமெனில் நீக்கி விடலாம் என மாறியது. அப்படியிருக்கையில் “Taskbar in Windows 11” எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது, எப்படி நாம் அதை மாற்றிக் கொள்ளலாம் என பார்ப்போம்.

Taskbar in Windows 11

விண்டோஸ் 11 ஐ பொறுத்தவரை டாஸ்க் பாரில் ஸ்டார்ட் மெனுவுடன் இன்னும் மூன்று விஷயங்கள் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை வேண்டாமெனில் நீங்கள் நீக்கிக் கொள்ளலாம். அந்த மூன்று விஷயங்கள்

  1. Search
  2. Task View
  3. Widgets

Search

நீங்கள் சர்ச் எஞ்சினில் சென்று ஏதாவது தேடவேண்டுமெனில் இதற்காக தனியாக பிரவுசரை துவக்க வேண்டாம். டாஸ்க் பாரில் உள்ள சர்ச் ஐகானை க்ளிக் செய்து இங்கேயே தேட முடியும். உங்கள் தேடலின் முடிவுகளும் அங்கேயே காட்டும். எந்த லிங்கை ஓபன் செய்ய வேண்டுமோ அதை க்ளிக் செய்தால் உங்கள் கணிணியில் எட்ஜ் பிரவுசர் ஓபன் ஆகி அதில் அந்த தளம் காட்டும்.

Taskbar in Windows 11

Task View

நாம் பல ப்ரோக்ராம்களை ஓபன் செய்து வைத்து வேலை செய்துகொண்டிருப்போம். பொதுவாய் ALT + TAB உபயோகித்து ஒரு விண்டோவில் இருந்து அடுத்த விண்டோவிற்கு மாறுவோம். Windows 11ல் புதிதாய் வந்துள்ள “Multiple Desktop ” ஆப்ஷன் உபயோகித்து இரண்டு மூன்று டெஸ்க் டாப் ஸ்க்ரீன்கள் வைத்துக்கொண்டு வேலை செய்தால் இந்த “Task View “ உபயோகித்து ஒரு டெஸ்க் டாப்பில் இருந்து மற்றொரு டெஸ்க் டாப் ஸ்க்ரீனுக்கு மாறி விடலாம்,

Taskbar in Windows 11
Taskbar in Windows 11

Widgets

நாம் ஏற்கனவே இந்த விட்ஜெட்ஸ் பற்றி பார்த்திருக்கிறோம். விட்ஜெட்ஸ் உபயோகிப்பவராக இருந்தால் இந்த ஆப்ஷன் தேவை இல்லையெனில் இது வெற்று அலங்காரம் மட்டுமே. இன்னும் நல்ல உபயோகம் தரக்கூடிய விட்ஜெட்ஸ் சேர்க்கப்படும் வரை இது தேவை இல்லை.

இந்த மூன்று ஆப்ஷன்களும் தேவை இல்லை என்போர் அதை அணைத்து வைக்கலாம்.

  1. டாஸ்க் பாரில் ரைட் க்ளிக் செய்யவும் .
  2. Taskbar settings என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
  3. இப்பொழுது வரும் ஸ்க்ரீனில் முதல் மூன்று ஆப்ஷன்கள் எது தேவையோ அதை வைத்துக் கொள்ளலாம். தேவையில்லாதவையை அணைத்து விடலாம்.

Taskbar in Windows 11

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.