இப்பொழுது நீங்கள் புது மொபைல் வாங்கி உங்கள் வாட்ஸ் அப் சாட்களை புதிய மொபைலுக்கு மாற்ற வேண்டுமென்றால், முதலில் பழைய மொபைலில் உள்ள சாட்களை கூகிள் ட்ரைவிற்கு பேக் அப் செய்ய வேண்டும். பின் புதிய மொபைலில் வாட்ஸ் அப் செயலியை இன்ஸ்டால் செய்து பின் கூகிள் ட்ரைவில் இருந்து மீண்டும் பேக் அப் எடுத்தவற்றை டவுன் லோட் செய்ய வேண்டும். இனி இதற்கு அவசியம் இருக்காது. எளிதாக உங்கள் சாட்களை மாற்றும் வசதியை ( Transfer Whatsapp Chats )இப்பொழுது சோதனை செய்து வருகிறது வாட்ஸ் அப் நிறுவனம்.
Steps to Transfer Whatsapp Chats
புதிய மொபைலில் வாட்ஸ் அப் நிறுவிய பின் அதில் ” Move Chats ” ஆப்ஷனுக்கு சென்றால் QR code ஸ்கேன் செய்ய சொல்லும்.
பழைய மொபைலில் அதே ஆப்ஷனுக்கு சென்றால் QR code காட்டும். அதை புதிய மொபைலில் ஸ்கேன் செய்தால் உங்கள் சாட் அனைத்தும் புதிய மொபைலுக்கு மாறிவிடும்
இந்த வசதி இன்னும் சோதனையில் மட்டுமே உள்ளது. விரைவில் பீட்டா சோதனையாளர்களுக்கு இந்த வசதி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை காத்திருக்கவும்.