Undo delete messages

Undo delete messages in Whatsapp

வாட்ஸ் அப் செயலியில் குழுவிலோ அல்லது தனிப்பட்ட உரையாடலிலோ நீங்கள் ஒரு மெசேஜை தவறுதலாக டெலீட் செய்துவிட்டால் அதை மீண்டும் பெற இயலாது அல்லது அனைவருக்கும் அந்த மெசேஜை டெலீட் செய்வதற்கு ( Delete for all ) பதிலாக உங்களுக்கு மட்டும் டெலீட் ( delete message for myself ) செய்திருக்கலாம். இப்பொழுது நீங்கள் செய்ததை சரி செய்ய வேண்டுமெனில் அதற்க்கு ” Undo delete messages ” ஆப்ஷன் தேவைப்படும். இதுவரை இந்த வசதி வாட்ஸ் அப் செயலியில் இல்லை. இப்பொழுது இந்த வசதியை கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

undo delete messages
PC: https://wabetainfo.com

மேலே உள்ள படத்தில் காட்டியுள்ளவாறு நீங்கள் மெசேஜை டெலீட் செய்தவுடன் , கீழே ” Message deleted ” என்ற நோட்டிபிகேஷன் வரும். அதன் வலது பக்கம் “UNDO ” என்ற ஆப்ஷன் வரும். அது சில வினாடிகள் அங்கே காட்டப்படலாம். அதற்குள் நீங்கள் அந்த வசதியை உபயோகிக்கலாம். இது இப்பொழுது இருக்கும் நிலை. ஆனால் இது அனைவருக்குமான பொது பயன்பாட்டிற்கு வரும் பொழுது இதில் மாற்றங்கள் இருக்கலாம்.

இந்த வசதி இப்பொழுது வரை டெவெலப்மென்டில் மட்டுமே உள்ளது. இன்னும் சோதனைக்காக பீட்டா டெஸ்டர்களுக்கு வரவில்லை. எனவே அனைவருக்கும் இந்த வசதி வர இன்னும் சில காலம் ஆகலாம். எனவே காத்திருக்கவும்.

ட்விட்டரில் எங்களை பின் தொடர

About Author