இப்பொழுது உங்கள் வாட்ஸ் அப் அக்கவுண்ட் டேட்டாவை பேக் அப் எடுத்து ஸ்டோர் செய்வது கூகிள் ட்ரைவ் மூலமே நடக்கிறது ( ஆண்ட்ராய்ட் மொபைல்களில் ). இதற்கு முக்கிய காரணம் கூகிள் ட்ரைவ் வழங்கும் 15 ஜிபி இடத்தில் உங்களுடைய வாட்ஸ் அப் பேக் அப் டேட்டா சேர்க்கப்படுவதில்லை. அதனால் நீங்கள் எவ்வளவு சேமித்தாலும் பிரச்சனை இல்லை. ஆனால் சமீபக் காலங்களில் கூகிள் தான் வழங்கும் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் எப்படி உபயோகப்படுத்தப்படுகிறது என்பதை மாற்றி அமைத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக Unlimited whatsapp backup என்பதை நீக்கி விட்டு அதற்கு பதில் ஒவ்வொரு பயனாளருக்கும் 2 ஜிபி ( 2000 எம் பி ) மட்டுமே அனுமதிக்கலாம் என முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இன்னும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும் சில வாரங்களில் கூகிள் இதை பற்றி அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Whatsapp plan to counter Unlimited whatsapp backup issue with Google
பலரும் இன்றும் அதிகமான வாட்ஸ் அப் குழுக்களில் உள்ளனர். அதில் பல போட்டோக்கள் வீடியோக்கள் வருகின்றன. இப்பொழுது உள்ள பேக் அப் செட்டிங்கில் வீடியோவை பேக் அப் எடுப்பதில் இருந்து தவிர்க்க இயலும். ஆனால் ஆடியோ கோப்புகள், படங்கள் போன்றவைகளை பேக் அப் எடுப்பதில் இருந்து தவிர்க்க இயலாது. இப்பொழுது இருக்கும் செட்டிங் கீழே படத்தில்
இப்பொழுது வாட்ஸ் அப் இதை மாற்றி சோதனை செய்து வருகிறது. சோதனையில் இருக்கும் இந்த வசதி பயன்பாட்டுக்கு வரும்பொழுது, பயனாளர்கள் எதை எதை பேக் அப் எடுக்க வேண்டாம் என முடிவு செய்துக்கொள்ளலாம். இது இன்னும் ஆரம்பக்கட்ட சோதனையில்தான் உள்ளது. எனவே இன்னும் பீட்டா பயனாளர்களுக்கும் இந்த வசதி வரவில்லை. wabetainfo தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செய்தியை அடிப்படையாகக் கொண்டு இந்த பதிவு எழுதப்பட்டுள்ளது. இந்த வசதி அறிமுகமானப் பின் எதை பேக் அப் எடுக்க விரும்புகிறீர்களோ அதை மட்டும் பேக் அப் எடுத்துக் கொள்ளலாம்.