வாட்ஸ் அப் உபயோகிப்பாளர்கள் அனைவருக்குமே எப்படி வாட்ஸ் அப்பை ஒரே சமயத்தில் மொபைல் மற்றும் கணிணியில் ( ஒன்றுக்கும் மேற்பட்ட கருவிகளில் ) உபயோகிப்பது என்று தெரியும். இது குறித்து ஏற்கனவே இந்த இதழில் எழுதியும் உள்ளோம். அதே போல் இப்பொழுது புதிய ” Secondary mobile device “ வர உள்ளது. அதாவது இப்பொழுது வரை உங்கள் வாட்ஸ் அப் கணக்கை ஒரே ஒரு மொபைலில் மட்டுமே உபயோகிக்க முடியும். ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மொபைல்களில் / டேப்களில் உபயோகிக்க முடியாது. அப்படி உபயோகிக்க முயன்றால் லாக் அவுட் ஆகி விடும்.
whatsapp on Secondary mobile device
ஒரே நேரத்தில் ஒரே வாட்ஸ் அப் கணக்கை ஒன்றிற்கும் மேற்பட்ட கருவிகளில் உபயோகிக்கும் வசதியின் அடுத்த கட்டமாக ஒன்றிற்கும் மேற்பட்ட மொபைல்களில் உபயோகிக்கும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் சோதித்து வருகிறது. இன்னும் எந்த வித பயனாளர்களுக்கு இந்த வசதி வரவில்லை என்ன wabetainfo தளம் சொல்லுகிறது. எனவே இது பீட்டா உபயோகிப்பாளர்களுக்கு விரைவில் வரலாம் என தெரிகிறது.
- இரண்டாவது மொபைலில் இருந்து வாட்ஸ் அப் உபயோகிக்க முயன்றால் மேலே இருப்பதாய் போன்ற ஸ்க்ரீன் வரும்.
- அப்பொழுது உங்கள் முதல் மொபைலில் வாட்ஸ் அப் ஓபன் செய்து ” linked Devices ” ஆப்ஷன் செல்லவும்.
- பின் QR code ஸ்கேன் செய்தவுடன் இரண்டு மொபைல்களிலும் இப்பொழுது ஒரே வாட்ஸ் அப் எண்ணை உபயோகிக்கலாம்.
இந்த வசதி சோதனையில் உள்ளதால், எப்படி வேண்டுமானாலும் மாறலாம். எனவே இதில் மாற்றம் எதுவும் இருந்தால் அப்டேட் செய்வோம்.