ஜூன் மாதம் புதிதாய் Whatsapp channels கொண்டுவரப்போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்து இருந்தது. முதலில் சில நாடுகளுக்கு மட்டும் வந்த இந்த வசதி இப்பொழுது 150 நாடுகளுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாய் அறிவித்துள்ளது. இது ஆண்ட்ராய்ட் + ஐ ஓ எஸ் மற்றும் டெஸ்க்டாப் என்று அனைத்திலிருந்தும் உபயோகப்படுத்த முடியும்.
Whatsapp channels snippets
- புதிய சேனல் உருவாக்கும் வசதி இன்னும் அனைவருக்கும் வரவில்லை
- ஏற்கனவே இருந்த ” Status ” tab க்கு பதில் புதிதாய் “Updates ” என்ற tab இருக்கும்.
- updates tab இல் உங்கள் நண்பர்களின் ஸ்டேட்டஸ் அப்டேட் மற்றும் சேனல் அப்டேட் இரண்டையும் பார்க்க இயலும்
- எந்த ஒரு சேனலிலும் நம்பி சேரலாம். நீங்கள் அந்த சேனலில் இணைந்துள்ளது யாருக்கும் தெரியாது.
- உங்கள் எண் சேனல் ஓனர் / அட்மின் / பாலோவர் என யாருக்கும் காட்டாது.
- கடைசி இரு நம்பர் மட்டும் காட்டும்
- உங்கள் ப்ரொபைல் படம் மற்றும் பெயர் பார்க்க இயலும்
- எல்லா சேனல்களும் மியூட்டில் இருக்கும். அந்த சேனல் அப்டேட் வரவேண்டுமென்றால் unmute செய்ய வேண்டும்.
- சேனல்களில் வரும் செய்திகளை மற்றவர்களுக்கு பகிரும் பொழுது சேனல் பெயருடன் போகும்.
- சேனல்களில் அட்மின் / ஓனர் தவிர வேறு யாரும் எதையும் பகிர இயலாது.
- நீங்கள் எத்தனை சேனல்கள் / என்ன சேனல்களில் இணைந்து உள்ளீர்கள் என்ற விவரமும் மற்றவர்களுக்கு காட்டாது.
- இந்த வசதி அனைவருக்கும் வந்துள்ளது. உங்களுக்கு காட்டவில்லையெனில் ப்ளே ஸ்டோர் சென்று வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்யவும். வாட்ஸ் அப் பிஸ்னஸ் செயலிக்கு இன்னும் இந்த அப்டேட் வரவில்லை.