வாட்ஸ் அப் தனது செயலுக்கு தொடர்ந்து பல புதிய வசதிகளை கொண்டு வருகிறது. அதுமட்டுமில்லாது ஏற்கனவே இருக்கும் வசதிகளை மேம்படுத்தி வருகிறது. இந்த வருடம் பல சோதனைகளை எதிர்கொண்டாலும் , பல புதிய விஷயங்களையும் செய்து வருகிறது. இந்த வரிசையில் இன்று வர உள்ளது Whatsapp Group Calls improvement.
இது ஐ ஓஎஸ் பீட்டா பதிப்புக்கு மட்டுமே இன்று அறிமுகப்படுத்தப்பட்டாலும் இன்னும் சில நாட்களில் ஆண்ட்ராய்ட் பீட்டா பதிவிலும் இந்த வசதிகள் வரும் என WAbetainfo தளம் கூறியுள்ளது. இந்த அப்டேட்டில் இரண்டு புதிய விஷயங்கள். முதல் விஷயம் க்ரூப் வாய்ஸ் காலிங் ஸ்க்ரீன் மாறியுள்ளது. அதை கீழே பார்க்கலாம்.
அடுத்த வசதி. இப்பொழுது க்ரூப் அழைப்புகளில் அழைப்பு வரும் பொழுது ஒருவர் இணையாவிடில் மீண்டும் அவருக்கு அழைத்தால் மட்டுமே இணைய இயலும். இதுதான் Whatsapp Group Calls improvement யின் மிக முக்கிய அம்சம். இந்த அப்டேட் மூலம், க்ரூப் அழைப்பு வரும்பொழுது இணையாவிடில் அந்த க்ரூபில் “Join call” பட்டன் மூலம் அந்த அழைப்பில் இணையலாம் அல்லது Calls டேபில் “Tap to join ” என்ற பேனர் இருக்கும் அதை க்ளிக் செய்தும் க்ரூப் அழைப்பில் இணையலாம்.
உங்கள் வாட்ஸ் அப் பீட்டாவில் இந்த வசதி வராவிடில் இரண்டு நாட்கள் காத்திருக்கவும். பீட்டா உபயோகிப்பாளர் இல்லையெனில் இன்னும் சில காலம் பொறுக்கவும்.