வாட்ஸ் அப் உபயோகிப்பாளர்கள் ரொம்ப காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் இந்த Whatsapp Multi device support. இது வரையிலும் நீங்கள் உங்கள் வாட்ஸ் அப் செயலியை கணிணியில் உபயோகிக்க வேண்டுமென்றால் உங்கள் மொபைலும் இணைய இணைப்பில் இருக்க வேண்டியது கட்டாயமாக இருந்தது. இந்த புதிய வசதி மூலம் உங்கள் மொபைல் இணைய இணைப்பில் இல்லையென்றாலும் உங்கள் கணிணியில் நீங்கள் தொடர்ந்து வாட்ஸ் அப் உபயோகிக்க இயலும்.
இந்த அப்டேட்டில் மிக முக்கிய விஷயம் எதுவென்றால் ஒரே நேரத்தில் ஒரு போன் மற்றும் நான்கு கணிணிகளில் உபயோகம் செய்து கொள்ள முடியும். இந்த அப்டேட் இப்பொழுது வாட்ஸ் அப் ஆண்ட்ராய்ட் பதிப்பின் பீட்டா வெர்ஷன் உபயோகம் செய்பவர்களுக்கு மட்டுமே வந்துள்ளது. இன்னும் சிறிது நாளில் அனைவருக்கும் இந்த வசதி வரும்.
முதலில் உங்கள் மொபைலில் வாட்ஸ் அப் பீட்டா பதிப்பின் சமீபத்திய வெர்ஷனை உபயோகம் செய்கிறீர்களா என செக் செய்துகொள்ளவும். பின்பு ,
வலது மேல் பக்கம் இருக்கும் மூன்று புள்ளிகளை தொடவும்.
அதில் வரும் “Linked Devices ” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்
“Link A Device” என்ற ஆப்ஷனுக்கு கீழே “Multi Device Beta” ஆப்ஷன் இருக்கும். அதை அழுத்தவும்.
இப்பொழுது “Multi Device Beta” சேர சொல்லும். சேரவும்.
அடுத்து பழைய ஸ்க்ரீனுக்கு வரும் .
இப்பொழுது நீங்கள் உங்கள் கணிணியில் வாட்ஸ் அப் ( Whatsapp For Desktop) or web.whatsapp.com செல்லவும். மறுபடியும் “QR Code “ ஸ்கேன் செய்யயவும். இனி உங்கள் மொபைல் இணைய இணைப்பில் இல்லையென்றாலும் நீங்கள் கணிணியில் தொடர்ந்து வாட்ஸ் அப்பை தொடர்ந்து உபயோகிக்கலாம்.
வழக்கம் போல் கீழே ஸ்க்ரீன் ஷாட்
கணிணியில் நீங்கள் லாகின் செய்தவுடன் ஸ்க்ரீன் கீழே இருப்பது போல் வரும் ( வாட்ஸ் அப் வலது பக்கம்)
மொபைலில் நெட் ஆப் செய்த பின் கணிணியில் இருந்து மெசேஜ் செய்தேன். எந்தவித பிரச்சனையும் இன்றி சென்றது