விண்டோஸ் 11ல் புதிதாய் வந்திருக்கும் விஷயங்களை தினம் ஒன்றாக இனி பார்ப்போம். முதலில் ஸ்டார்ட் மெனுவுடன் புதிதாய் வந்திருக்கும் Widgets, search,task view பார்ப்போம். அதன் பின் செட்டிங்ஸ். இந்த Widgets ஐடியா முதலில் மைக்ரோசாஃப்ட் கொண்டுவந்தது விண்டோஸ் விஸ்டாவில். விண்டோஸின் அந்த பதிப்பு மிக மோசமான தோல்விகரமான பதிப்பு . அப்பொழுது இதற்கு “Gadgets” என்று பெயர் வைத்திருந்தது. இப்பொழுது அதே விஷயத்தை பெயர் மாற்றி இடத்தை மாற்றி உள்ளார்கள்.

விஸ்டா பதிப்பில் டெஸ்க் டாப்பில் நேரம், கேலண்டர், வெதர் போன்றவற்றை சேர்க்க முடிந்தது. இப்பொழுது டெஸ்க் டாப்பை தொடவில்லை. அதுவரையும் மகிழ்ச்சி. அதற்கு பதில் டெஸ்க் டாப்பில் இருந்து ஒரு மெனுவாக ( டைல் ) கொடுத்துள்ளனர். கீழே ஸ்க்ரீன்ஷாட் கொடுத்துள்ளேன்.
How to access Widgets in Windows 11
டெஸ்க் டாப்பில் நடுவில் விண்டோஸின் வழக்கமான ஸ்டார்ட் மெனுவிற்கு அருகில் இருக்கும். ஸ்டார்ட் மெனு, அதன் பிறகு search அதன் பின் Task View அதன் பின் widgets பட்டன். இதை அழுத்தினால் விட்ஜெட்ஸ் ஸ்க்ரீன் வரும்.


இப்பொழுதைக்கு ஒரு நாலு widgets மட்டுமே இருக்கு. வெதர் , காலெண்டர், To Do, போட்டோஸ் இப்படி. இன்னும் சிலது உருப்படியா வந்தா நல்லா இருக்கும். ஆனாலும், இவற்றை மெனக்கெட்டு யார் மெனுவிற்கு சென்று பார்ப்பார்கள் என்ற கேள்வி எழாமல் இல்லை. இந்த விட்ஜெட்ஸ் டைல்ஸ்க்கு கீழே நியூஸ் வைத்துள்ளனர். அதில் நீங்கள் உங்கள் வசதிக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
