Windows 11 release date announced!!

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடுத்த பதிப்பான Windows 11 இன் சோதனை பதிப்பை ( dev channel ) கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது. அடுத்து பீட்டா பதிவை கடந்த மாதம் வெளியிட்டது. இதையடுத்து அனைவருக்குமான பாதிப்பு எப்பொழுது வெளியாகும் என்று இப்பொழுது கூறியுள்ளது. அக்டோபர் 5 ம் தேதி windows 11 அனைத்து பயன்பாட்டாளர்களுக்கும் கிடைக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஒரிஜினல் windows 10 உபயோகம் செய்யும் அனைவருக்கும் windows 11 இலவசமாய் கிடைக்கும். ஆனால் உங்கள் கணிணி windows 11க்கு தேவையான ஹார்டுவேர் கொண்டிருக்க வேண்டும். Windows 11 இன்ஸ்டால் செய்ய உங்கள் கணிணியில்  8th-gen Core processors (Coffee Lake), Ryzen 2000 அல்லது அதற்கு பிந்தைய ( newer ) ப்ராசசர் இருக்க வேண்டும். இதை விட பழைய ப்ராசசர் எனில் விண்டோஸ் 11 ஐ இன்ஸ்டால் செய்ய இயலாது என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.

அதே போல் சில சப்போர்ட் செய்யாத கணிணிகளிலும் விண்டோஸ் 11 dev channel பதிப்பை இன்ஸ்டால் செய்ய மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அனுமதித்திருந்தது. ஆனால் அக்டோபர் மாதம் அனைவருக்குமான விண்டோஸ் 11 பதிப்பு வெளியான பின்பு இந்த கணிணிகளில் விண்டோஸ் 11 தொடர்ந்து வேலை செய்யாது. அவர்கள் விண்டோஸ் 10 பதிப்பை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். அப்படி சப்போர்ட் செய்யாத கணிணிகளில் கீழ்கண்ட மெசேஜ் வரும்.

Windows 11 cumulative updates

அக்டோபர் 5 விண்டோஸ் 11 ரிலீஸ் ஆனாலும் விண்டோஸ் 11 இன்ஸ்டால் செய்ய தகுதி உடைய அனைத்து கணிணிகளுக்கும் விண்டோஸ் 11 அப்டேட் 2022க்குள் அப்டேட் செய்யப்படும் எனத் தெரிகிறது. அதே போல் விண்டோஸ் 11 அப்டேட் வழக்கமான விண்டோஸ் அப்டேட் மூலமே அப்டேட் ஆகும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.