நேற்று மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸின் அடுத்த பதிப்பான Windows 11 ஐ அறிமுகப்படுத்தியது. முதலில் அடுத்த விண்டோஸ் பதிப்பாக windows 10 x வர இருந்தது. இது இரட்டை டிஸ்பிளே கருவிகளுக்காக வர இருந்தது. ஆனால் நடுவில் என்ன நடந்தது எனத் தெரியவில்லை. அதை கைவிட்டுவிட்டு இப்பொழுது அனைவருக்குமான windows 11 பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் முக்கியமான ஐந்து மாற்றங்களை கீழே தந்துள்ளேன்.
- மைக்ரோசாப்டின் விண்டோஸ் ஸ்டோர் பெரிய அளவில் மாற்றப் படுகிறது. இப்பொழுது இருப்பதை விட அதிக அளவில் மென்பொருட்கள் இதில் கிடைக்கும் என தெரிகிறது.
- இப்பொழுது ஆன்ட்ராய்ட் செயலிகளை நேரடியாக கணிணியில் உபயோகிக்க இயலாது. ஆனால் விண்டோஸ் 11 ல் அமேசான் ஆப் ஸ்டோர் மூலம் ஆன்ட்ராய்ட் செயலிகளை கணிணியில் உபயோகிக்க இயலும்
- அலெக்ஸாவில் உபயோகிப்பது மூலம் குரல் வழி கட்டளைகள் குடுக்க இயலும். இதை பற்றி இன்னும் விரிவான தகவல்கள் வர வேண்டும்
- மைக்ரோசாப்ட் டீம்ஸ் மென்பொருள் விண்டோஸ் உடன் இணைக்கப்படும்
- ஒரே கணிணியில் பல்வேறு டெஸ்க்டாப் ஸ்க்ரீன் உருவாக்கிக் கொள்ளலாம். இது லினக்ஸில் ஏற்கனவே உள்ள ஒரு விஷயம்.
இது எல்லாமே functonality பற்றிய மாற்றங்கள். இது தவிர ஸ்டார்ட் மெனு இடம் மாறுவது, ஒவ்வொரு விண்டோவின் மூலைகளும் ரவுண்ட் ஆவது பற்றியெல்லாம் விண்டோஸ் 11 இன்ஸ்டால் செய்தப் பின் பதிவாகப் போடுகிறேன்.
இதுவரை மைக்ரோசாப்ட் அதிகாரபூர்வமாக விண்டோஸ் 11 இன்ஸ்டால் செய்யும் முறைகளை கூறவில்லை. எனவே இணையத்தில் இப்பொழுது சுற்றும் விண்டோஸ் 11 பாதிப்புகளை இன்ஸ்டால் செய்ய வேண்டாம்.
நீங்கள் ஏற்கனவே விண்டோஸ் 10 லைசென்ஸ் பதிப்பு வைத்திருந்தால் விண்டோஸ் 11 இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம். விண்டோஸ் 11 , வழக்கமான விண்டோஸ் அப்டேட் மூலம் இன்ஸ்டால் ஆகி விடும். அதற்கு இந்த வருட இறுதி வரை காத்திருக்க வேண்டும்.
நீங்கள் விண்டோஸ் இன்ஸைட் பிரீவ்யூ மூலம் சோதனை செய்பவர் என்றால் அதில் “Dev Channel ” ( இது பீட்டாவிற்கும் முந்தைய பதிப்பு ) உபயோகிப்பவர் எனில் அடுத்த வாரம் windows 11 அப்டேட் வரும்.
Hardware requirements for Windows 11
Processor: | 1 gigahertz (GHz) or faster with 2 or more cores on a compatible 64-bit processor or System on a Chip (SoC) |
RAM: | 4 gigabyte (GB) |
Storage: | 64 GB or larger storage deviceNote: See below under “More information on storage space to keep Windows 11 up-to-date” for more details. |
System firmware: | UEFI, Secure Boot capable |
TPM: | Trusted Platform Module (TPM) version 2.0 |
Graphics card: | Compatible with DirectX 12 or later with WDDM 2.0 driver |
Display: | High definition (720p) display that is greater than 9” diagonally, 8 bits per colour channel |
Internet connection and Microsoft accounts: | Windows 11 Home edition requires internet connectivity and a Microsoft account to complete device setup on first use.Switching a device out of Windows 11 Home in S mode also requires internet connectivity. Learn more about S mode here.For all Windows 11 editions, internet access is required to perform updates and to download and take advantage of some features. A Microsoft account is required for some features. |
உங்கள் கணிணியில் விண்டோஸ் 11 இன்ஸ்டால் ஆகுமா என சோதனை செய்ய இந்த தளத்திற்கு சென்று Microsoft PC Health Check Tool டவுன்லோட் செய்து சோதித்து பார்க்கவும். நீங்கள் ஒரிஜினல் வர்ஷன் இன்ஸ்டால் செய்யாவிடில் இதை தவிர்க்கவும்.