ரிக் வேதீய ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 35

This entry is part 35 of 44 in the series ஶ்ராத்தம்

விஸ்வேதேவரிடம் கையில் சிறிது நீர் விட்டு ‘இயம் வஸ் த்ருப்திஹி’ என்று சொல்லி, ‘ரோசதே?’ என்று கேட்க வேண்டும். ‘ஸுத்ருʼப்தி꞉’ என்பார். ‘ப்ரீயந்தாம்’ என்று கேட்க ‘ப்ரீயந்தாம் விஶ்வே தே³வா꞉’ என்பார்.

அதே போல பித்ருக்களிடம் நீர் விட்டு ‘இயம் வஸ் த்ருப்திஹி’ என்று சொல்லி, ‘ஸ்வதி³தம்?’ என்று கேட்க வேண்டும். ‘ஸுத்ருʼப்தி꞉’ என்பர். ‘ப்ரீயந்தாம்’ என்று கேட்க ‘ப்ரீயந்தாம் பிதர꞉’ என்பர். ‘த்ருப்தாஸ்த’ என்று கேட்க ‘த்ருப்தாஸ்மஹ’ என்பர்.

மஹா விஷ்ணுவிடம் விஸ்வேதேவர் போலவே. ப்ரீயதாம் மஹாவிஷ்ணு என்று பதில் கொடுக்க வேண்டும். ‘த்ருப்தோஸி’ என்று கேட்க ‘த்ருப்தோஸ்மி’ என்பார்.
பின் போக்தாக்கள் அனைவருக்கும் தாம்பூலம் தக்ஷிணை தர வேண்டும். பின்னர் சுருக்கமாக அர்ச்சித்து குடும்பத்துடன் இவர்களை ப்ரதக்‌ஷிண நமஸ்காரம் செய்ய வேண்டும். பிறகு அஸ்மின் திவஸே (இன்று) என்று சொல்லி கோத்திரம் ஶர்மா எல்லாம் சொல்லி பார்வண விதானப்படி என்னால் செய்யப்பட்ட ‘என் தந்தையின்/ தாயின்/ வருடாந்திர சிராத்தத்தை, இன்ன விதமாக என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட விதத்தில் என்னால் முடிந்த அளவு செய்திருக்கிறேன். இதற்கு ‘கயாவில் சிராத்தம் செய்த பலன் கிடைக்கட்டும். பித்ருக்களுக்கு குறைவில்லாத திருப்தி உண்டாகும் படியும் இருக்கட்டும்’ என்று தாங்கள் அனுக்கிரகம் செய்ய வேண்டும்’ என்று வேண்டிக் கொள்ள வேண்டும். அவர்களும் அப்படியே இருக்கட்டும் என்று சொல்லுவார்கள். பிறகு மிகுந்த அன்னத்தை என்ன செய்வது -அன்னஶேஷை꞉ கிம்ʼ க்ரியதாம் – என்று கேட்க உங்களுக்கு இஷ்டமான நபர்களுடன் சேர்ந்து நீங்கள் உண்ணுங்கள் – இஷ்டை꞉ ஸஹோபபு⁴ஜ்யதாம் என்று அவர்கள் சொல்வார்கள். (இப்படிச் சொன்னாலும் பங்காளிகள்தான் உண்ண வேண்டும்). இதற்குப் பின் கர்த்தா போய் பிராமணர்கள் சாப்பிட்ட இலைகளை சற்று அசைக்க வேண்டும். இதன் பின்னரே இல்லத்தரசி இலைகளை எடுப்பதற்கு ஏற்பாடு செய்யலாம்.

அடுத்து பிரார்த்தனை வருகிறது. ‘தாதாரோ’ என்ற மந்திரம். இதன் பொருள்: ‘நிறைய தானம் அளிப்பவர் விருத்தி ஆகட்டும். வேதமும் சந்ததியும் வளரட்டும். சிரத்தை எங்களை விட்டு அகல கூடாது. தானம் செய்வதற்கு எங்களுக்கு நிறைய பொருள் உண்டாகட்டும். நிறைய அன்னம் கிடைக்கட்டும். அதிதிகளும் நிறைய வரவேண்டும். எங்களிடம் யாசிப்பவர்கள் நிறைய வரட்டும். நாங்கள் ஒருவரிடமும் யாசிக்கக்கூடாது.’ இப்படி கேட்க ‘எங்களுக்கு உண்டாகட்டும்’ என்று சொன்னதை அனைத்தையும் ‘உங்களுக்கு உண்டாகட்டும்’ இன்று பிரதி வசனமாக கூறுவார்கள்.

பிறகு கர்த்தா பூணூலை இடமாக மற்றிக்கொண்டு ‘ஓம் ஸ்வதா’ என்று சொல்ல பித்ரு பிராமணர் ‘அஸ்து ஸ்வதா’ என்று சொல்லுவார். பிறகு தெற்கு முகமாக நின்று கொண்டு மந்திரம் கூற வேண்டும். ஆரம்பத்தில் மந்திரம் கூறி பித்ருக்களை அழைத்தோம் இல்லையா? அதே போல இப்போது மந்திரம் கூறி அவர்களை அனுப்பி வைக்கிறோம்.

Series Navigation<< ஶ்ராத்தம் – 34ஶ்ராத்தம் – 36 >>

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.