Inspector Rishi

Inspector Rishi

அடுத்தடுத்து சில கொலைகள். ஒருவருக்கு ஒருவர் சம்பந்தமில்லாத நபர்கள் அதே போல் கொல்லப்பட்டு தொங்கவிடப்படுகின்றனர். வழக்கை விசாரிக்க வந்த ரிஷி எந்தவித தடயமும் இன்றி வனத்தை சுற்றி வருகிறார். எந்த ஒரு கொலையிலும், யாரிடமும் முழுவதாக விசாரிப்பதாக காட்டவில்லை. கதையில் தனி டிராக்காக வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பல் ஒரு பக்கம். அவர்களை பிடிக்கத் துடிக்கும் வன சரகராக கிருஷ்ணா தயாள்.

Label

Label – Web Series

வழக்கமாய் வட சென்னை என்றவுடன் நாயகன் அங்கிருக்கும் பல கும்பல்களில் ஒருவனாய் இருப்பான். அவ்வாறு இல்லாமல் கொஞ்சம் மாற்றி எடுத்துள்ளனர். நாயகனின் இளம் வயதில் நடக்கும் ஒரு சம்பவம் எப்படி பின்னால் அவனை பாதிக்கிறது என்பது கதையின் ஊடாய் வந்துள்ளது.

The Freelancer

The Freelancer

இனாயத்தின் மகள் அலியா . மலேசியா முஸ்லிமான மோஷின்னை காதலித்து குடும்பத்தினரின் சம்மதத்துடன் மணக்கிறார். திருமணத்திற்கு பின் துபாய் செல்ல வேண்டியவர்கள் குடும்பத்துடன் துருக்கி செல்ல அதன் பின் தன் குடும்பத்தினருடன் தொடர்பை இழக்கிறார் அலியா. துருக்கியில் இருந்து சிரியா சென்றவர்கள் ஐ எஸ் ஐஸ் எஸ் உடன் இணைய , திரும்பவும் நாடு திரும்ப துடிக்கிறார் அலியா.

Dahaad

Dahaad – என் பார்வையில்

இன்னும் ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களில் இருக்கும் பெண்களுக்கு எதிரான நிலை கதை நெடுக வந்து கொண்டே உள்ளது. அதே போன்று ஜாதி வேறுபாடுகள் பார்க்கும் சமுதாயத்தை பற்றியும்.கதையின் மிகப் பெரிய பலமாக நான் கருதுவது, வில்லன் யார் என தெரிந்தும் அதன் பின் கதை தொய்வடையாமல் அவனை எப்படி பிடிக்கின்றனர் எப்படி நிரூபிக்கினறனர் என கொண்டு சென்றுள்ளதே. இது போன்ற சீரியல் கில்லர் கதைகளில் வில்லன் தெரிந்துவிட்டால் கதையில் தொய்வு வந்துவிடும். அது இதில் இல்லை.

Asur

Asur – Season 1

இந்தியாவில் தொடர்ந்து நடக்கும் சீரியல் கொலைகள். கொலை செய்யப்படுபவர்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவர்கள். அவர்களின் ஒரு விரலில் பாதி மட்டும் வெட்டி எடுக்கப்படுகிறது. அர்ஷத் வார்ஷி தலைமையிலான ஒரு சிபிஐ குழு இந்த கொலைகளை விசாரிக்கிறது. இதன் நடுவே அர்ஷத்தின் மனைவியும் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். ஏற்கனவே சிபிஐயில் வேலை செய்து பின் எப் பி ஐ யில் வேலை செய்யும் Barun அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் சிபிஐயில் சேருகிறார். அவர் இந்த விசாரணையில் இறங்க , கிடைக்கும் தடயங்களை வைத்து அர்ஷத் அடியாள் மூலம் தனது மனைவியை கொலை செய்தார் என கூற அர்ஷத் கைது செய்யப்படுகிறார்.