வாட்ஸ் அப்பில் “disappearing messages “ என்ற ஆப்ஷன் இருப்பது நாம் அனைவருக்கும் தெரியும். அனைவரும் இதை சில காலமாய் பயன்படுத்தியும் வருகிறோம். இப்பொழுது இருக்கும் வசதி படி நீங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக இந்த வசதியை Enable செய்ய வேண்டும். அது மட்டுமில்லாது, குரூப்பாக இருந்தாலும் சரி தனிப்பட்ட அரட்டையாக இருந்தாலும் சரி இந்த வசதி ஆன் செய்யப்பட்டால் 7 நாளுக்கு பின்புதான் தானாக அழியும். அதற்கு குறைவாக செட் செய்ய இயலாது என்ற நிலை இருந்தது. இப்பொழுது அது மாறி சில ஆப்ஷன்கள் கொடுத்துள்ளனர். இப்பொழுது இருக்கும் வசதியின் ஸ்க்ரீன்ஷாட் .
இப்பொழுது இந்த வசதியை டிபால்ட்டாக அனைவருக்கும் enable செய்துகொள்ளலாம். அதே போல் இப்பொழுது 24 மணி நேரத்தில் ஆரம்பித்து பல ஆப்ஷன்கள் தரப்பட்டுள்ளது.
உங்கள் வாட்ஸ் அப் செயலியின் முகப்பிலிருந்து வலது மேல் மூலையில் இருக்கும் மூன்று புள்ளிகளை தொடவும்
அதில் “Settings” ஆப்ஷனை தேர்வு செய்யவும்
பின்பு “Accounts “ ஆப்ஷனை தேர்வு செய்யவும்
அதன் பின் “Privacy” தேர்வு செய்யவும்
இதன் பின் ” Disappearing messages “ என்பதின் கீழ் இருக்கும் “Default Message Timer ” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்
அதன் பின் உங்களுக்கு தேவையான கால அளவை தேர்வு செய்யவும்
இப்பொழுது நீங்கள் சாட் விண்டோவில் பார்த்தால் நான்காவது படத்தில் உள்ள மெசேஜ் இருக்கும்.
இதை நீங்க பொதுவில் அனைவருக்கும் ஒரே மாதிரி டைமர் தேர்வு செய்யலாம். இல்லையெனில் ஒவ்வொரு சாட் விண்டோவிலும் தனித்தனியாக தேர்வு செய்யலாம்.
Disappearing messages எப்படி தேர்வு செய்வது என்ற ஸ்க்ரீன் ஷாட் கீழே