சமீபகாலமாய் பல புதிய வசதிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது வாட்ஸ் அப் நிறுவனம். அதில் சில மற்ற மெசேஞ்சர் சர்வீஸ்களில் இருந்தாலும் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு இவை புதியதுதான். அந்த வரிசையில் இப்பொழுது புதியதாக அறிமுகப்படுத்தியுள்ள வசதி ” Filter Chats in Whatsapp”. Unread / Contacts / Non-Contacts / Groups என்று நான்கு பில்டர் ஆப்ஷன் உள்ளது . மூன்று நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதி இப்பொழுது வாட்ஸ் அப் டெஸ்க் டாப்பில் மட்டுமே உள்ளது.
சாட்களை பில்டர் செய்வது எப்படி ?
கீழே உள்ள படத்தை பார்க்கவும்.
- வலது மேல் புறம் உள்ள பில்டர் ஐக்கானை க்ளிக் செய்யவும்
- இப்பொழுது பில்டர் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்
- இதில் நான்கு ஆப்ஷன்கள் காட்டும். Unread / Contacts / Non-Contacts / Groups
- உங்களுக்கு எந்த சாட் பில்டர் செய்யப்பட வேண்டுமோ அந்த ஆப்ஷனை தேர்வு செய்யலாம். ( படம் 2 )
- நான் க்ரூப் சாட் மட்டும் பில்டர் செய்துள்ளேன்.
- ஆண்ட்ராய்ட் / ஐ ஓ எஸ் செயலிகளுக்கு இந்த வசதி இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.