Sorry who are you? I found you in my address book – Whatsapp scam

வாட்ஸ் அப் / பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களும் அவற்றின் மூலம் நடக்கும் பித்தலாட்டங்களும் என்றும் பிரிக்க இயலாதவை. ஒரு குறிப்பிட்ட பிரச்சனை பற்றி நாம் எழுதி எச்சரித்து முடிக்கையில் அடுத்த ஸ்கேம் வந்து நிற்கிறது. இப்பொழுது வெகு வேகமாய் நடந்து வரும் மற்றும் ஒரு ஸ்கேம் ” Sorry who are you? I found you in my address book ” . உங்கள் வாட்ஸ் அப் நம்பருக்கு இப்படி ஒரு மெசேஜ் வரும். இதுவரை உங்களுக்கு மெசேஜ் பண்ணாத எண்ணில் இருந்து இந்த மெசேஜ் வரும். பொதுவாய் நாம் மொபைல் போன் வந்த காலத்தில் இருந்து எண்களை ஞாபகம் வைத்துக் கொள்ளும் பழக்கத்தை மறந்துவிட்டோம். இதனால் உங்களுக்கும் இது யாரென்று நினைவிற்கு வருவது கடினம். கீழே இருக்கும் படம், இதே போன்ற ஒரு மெசேஜ் Wabetainfo தளத்தில் எழுதுபவருக்கு வந்தது. அதன் ஸ்க்ரீன் ஷாட்

Sorry who are you? I found you in my address book - Whatsapp scam
PC : https://wabetainfo.com/

இதற்கடுத்த கட்டமாய், உங்களைப் பற்றிய விவரங்களை கேக்க துவங்குவார்கள். இதுதான் உங்கள் தகவல் திருடு போக துவங்கும் முதல் கட்டம். இதற்கடுத்து உங்கள் இன்ஸ்டாகிராம் / பேஸ்புக்கில் இணைத்துக் கொள்ள சொல்லி கேப்பார்கள். தப்பி தவறி இதை செய்துவிட்டால் உங்கள் படங்களை திருட துவங்குவார்கள். இதன் அடுத்தக்கட்டம் இந்த படங்களை போட்டோஷாப் மூலம் மாற்றியமைத்து உங்களை மிரட்டத் துவங்குவார்கள். இந்தப் பிரச்சனைக்கு என்ன தீர்வு ? இந்த மாதிரி மெசேஜ் வந்தால் என்ன செய்யலாம்..தீர்வு கீழே

  1. உங்களுக்கு கண்டிப்பாக தெரியாத நபர் எனில் , நீங்கள் அவரை ப்ளாக் செய்யலாம். இது எளிய தீர்வு
  2. அந்த எண்ணை வாட்ஸ் அப்பிற்கு ரிப்போர்ட் செய்து ப்ளாக் செய்யலாம்
  3. தனிப்பட்ட விவரங்களை புதிய நபருடன் பகிராதீர்கள்
  4. அதேபோல் உங்கள் DP / profile Pic privacy – “Only Contacts : என்று மாற்றவும்.
  5. இது போன்ற தொந்தரவுகள் அதிகரித்தால், சைபர் க்ரைமில் புகார் அளிக்கவும்.

கீழே நான் தந்திருப்பது Wabetainfo தளத்தில் அவர்கள் கொடுத்திருப்பது

What can you do to protect your identity? You should always ignore unknown contacts and do not share private information such as your personal social account. You can also report the contact to WhatsApp from their contact info, but you can also report specific messages. In addition, be sure to set the privacy setting for your profile photo to “My Contacts”. If something goes wrong, please report anything to the police: the police may be able to locate the phone number.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.