வாட்ஸ் அப் செயலியில் புதிய வசதிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றனர். சில வசதிகள் அதிக முக்கியத்துவம் இல்லாதவை. ஆனால் சில கண்டிப்பாக பலருக்கும் உபயோகப்படும். அந்த வகையில் வாட்ஸ் அப் பீட்டா செயலி பதிப்பு 2.21.14.3 ல் புதிதாய் இவர்கள் அறிமுகப்படுத்தி இருப்பது View Once. அதாவது நீங்கள் அனுப்பும் போட்டோ அல்லது வீடியோவை ஒருமுறை மட்டுமே பார்க்குமாறு செட் செய்ய முடியும். அதற்கு மேல் அதை பார்க்க இயலாது.
How to enable “View Once”
நீங்கள் யாருக்கு போட்டோ அனுப்ப வேண்டுமோ அந்த சாட் விண்டோவை ஓபன் செய்யவும்
எந்த போட்டோவை அனுப்ப வேண்டுமோ அதை இணைக்கவும். அப்பொழுது, இடது பக்கம் கீழே “1” என்ற எண் தெரியும். அதை க்ளிக் செய்யவும். இப்பொழுது நீங்கள் அனுப்பும் போட்டோவை பெறுபவர் ஒருமுறை மட்டுமே பார்க்க இயலும்.
போட்டோவை அனுப்பிய பின் , உங்களுக்கும் அந்த இமேஜ் காட்டாது , “Photo ” என்ற செய்தியுடன் 1 என்ற சிம்பல் காட்டும். அதை பெறுபவருக்கு மீடியா காட்டாது. உங்களுக்கு காட்டுவது போன்று மெசேஜ் மட்டும் காட்டும். அதை க்ளிக் செய்தால் ஒருமுறை மட்டுமே பார்க்க இயலும். க்ளோஸ் செய்துவிட்டு மீண்டும் பார்க்க இயலாது. அதற்கு பதில் “Opened” என்று மெசேஜ் காட்டும்.
இது ஆன்ட்ராய்ட் பீட்டாவில் மட்டுமே வந்துள்ளது. சில வாரங்களில் அனைவருக்கும் வரலாம். அதே போல் “Web.whatsapp.com” உபயோகம் செய்தாலும் இந்த “View Once” முறையை உபயோகிக்கலாம்.
கீழே படங்களுடன் செய்முறை.