- Whatsapp Desktop Beta – How to get it ?
- Whatsapp UWP app 2.2145.3.0 – Windows 10/11
- WhatsApp beta UWP 2.2201.2.0
- Dark mode for Whatsapp UWP Version
வாட்ஸ் அப் டெஸ்க் டாப் பதிப்பு ஒன்று இருந்தாலும், Whatsapp beta UWP எனப்படும் Universal Windows Platform க்கான வாட்ஸ் அப் செயலியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இது விண்டோஸ் 10 மற்றும் விண்டோஸ் 11 இரண்டு இயங்குதளங்களில் மட்டுமே வேலை செய்யும். அதற்கு முந்தைய விண்டோஸ் பதிப்புகளில் வேலை செய்யாது. இது இன்னும் முழுக்க முழுக்க பீட்டா பதிப்பில் உள்ளதால் சில பிரச்சனைகளும் வரும் அதே சமயம் அடிக்கடி புதிய மாற்றங்கள் நடந்துகொண்டே இருக்கும். புதிய மாற்றம் எனப்படுவது புதிதாய் ஒரு வசதியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வாட்ஸ் அப் செயலியின் UI மாற்றமாகக் கூட இருக்கலாம்.
இப்பொழுது வெளியாகி இருக்கும் WhatsApp beta UWP 2.2201.2.0 பதிப்பில் புதிதாய் எந்த ஒரு வசதியும் வரவில்லை. சில UI மாற்றங்கள் மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது விண்டோஸ் 11 இயங்குதளத்தில் இயங்கும் அனைத்து மென்பொருட்களும் விண்டோஸ் 11 UI க்கு ஏற்றார் போல் இருக்க வேண்டும் என விரும்புகிறது. ஒரே மாதிரியான விண்டோ, அதன் font போன்றவை. இப்பொழுது வந்துள்ள இந்த பதிப்பிலும் அத்தகைய மாற்றங்களே வந்துள்ளன. இந்த பதிப்பில் வந்துள்ள மாற்றங்கள் கலர் மற்றும் font சைஸ். இதற்கான படங்கள் கீழே…
படங்கள் https://wabetainfo.com/ தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
எங்கள் டெலிகிராம் சேனலில் இணைய