வாட்ஸ் அப் செயலியை பொறுத்தவரை இவ்வளவு காலம் வாட்ஸ் அப் வெப் எப்படி இருக்குமோ அதை போன்றேதான் விண்டோஸிற்கான வாட்ஸ் அப் செயலியும் இருந்தது. அதன் UI மற்றும் வேலை செய்யும் விதம் என பெரும்பாலும் ஒரே மாதிரிதான் இருக்கும். இருந்தாலும் விண்டோஸ் செயலியில் அதிகப்படியான சில வசதிகள் இருந்தன. இருந்தாலும் சில குறைபாடுகள் குறிப்பாக மிக மெதுவாக வேலை செய்வதாக குற்றசாட்டுகள் இருந்துகொண்டேதான் இருந்தன. இந்த தருணத்தில்தான் விண்டோஸ் 11 அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பல நிறுவனங்களும் தங்களுடைய மென்பொருட்கள் / செயலிகளை விண்டோஸ் 11க்கு ஏற்றவாறு மாற்றினார். வாட்ஸ் அப் செயலியும் தன்னை புதுப்பித்துக் கொண்டது. விண்டோஸுக்கான புதிய செயலியாக “Whatsapp UWP app” ஐ வெளியிட்டது. இப்பொழுது விண்டோஸில் இயங்கும் இருவித செயலிகள் வாட்ஸ் அப்பிற்கு உள்ளது. ஒன்று பழைய வாட்ஸ் அப் வெப் மற்றோன்று புதிய UWP செயலி.
இந்த செயலியை எப்படி உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்வது என்பதற்கு இந்த பதிவை பார்க்கவும்
இந்த Whatsapp UWP app இல் சில விஷயங்கள் நன்றாக உள்ளன. குறிப்பாய் பழைய செயலியை விட வேகமாக செயல்படுகிறது. இரண்டாவது இதில் உங்கள் தகவல்கள் சிங்க் ( மொபைலுடன் ) ஆக அதிக நேரம் எடுப்பதில்லை.
இதன் UI மிக சிறப்பாக உள்ளது.
இதில் மெசேஜ்களுக்கு பதில் அளிக்க, சம்பந்தப்பட்ட மெசேஜில் ரைட் க்ளிக் செய்தால் அதற்குண்டான ஆப்ஷன்கள் வரும். அதில் உங்களுக்கு வேண்டிய ஆப்ஷனை தேர்வு கொள்ளலாம். பழைய செயலியில், மூலையில் இருக்கும் டிராப் டவுன் ஆரோ வை தேட வேண்டும்.
இப்பொழுது இந்த புதிய செயலியில் “Feedback “ ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது வாட்ஸ் அப். இந்த வசதியை பெற நீங்கள் “2.2145.3.0” பதிப்பை வைத்திருப்பது அவசியம். பழைய பதிப்பில் இருந்தால் விண்டோஸ் ஸ்டோர் சென்று அப்டேட் செய்து கொள்ளவும். நீங்கள் இந்த பதிப்பில் இருந்தால் , செயலியை துவங்கியவுடன், கீழ்கண்ட மெசேஜ் வலது பக்கம் வரும்.

இப்பொழுது உங்கள் வாட்ஸ் அப் செயலியின் இடது கீழ் பக்கம் “Feedback” என்ற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்தால் உங்கள் கணிணியில் எந்த மெயில் மென்பொருள் இருக்கிறதோ அதை ஓபன் செய்யும். உங்கள் கருத்தை நீங்கள் வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு தெரிவிக்கலாம். இதன் ஸ்க்ரீன் ஷாட் கீழே
இந்த புதிய UWP செயலி விண்டோஸ் 10 / 11 ல் மட்டுமே வேலை செய்யும்.