அடுத்த சவால் என்ன?

This entry is part 7 of 10 in the series வாழ்வியல்

வாழ்க்கையின் மிகப் பெரிய சவாலே நமக்கு என்ன கிடைக்கும் என்பதல்ல. இதன் மூலம் நாம் என்ன பெறப் போகிறோம் என்பதுதான். இதுல என்ன பெருசா வித்தியாசம் அப்படிங்கிற கேள்வி பலருடைய மனசுல தோணலாம்.

காலேஜுக்கு படிக்க போனா நிச்சயம் எல்லாருக்கும் சிறப்பான கல்வி கிடைக்கும். அதைத்தாண்டி சிறந்த கல்வியாளர்கள் கூட பழகக் கூடிய வாய்ப்பு, வேறுபட்ட கலாசாரங்களுடன் பிற மாகாணங்களில் இருந்தும் மாநிலங்களிலிருந்தும் வந்து படிக்கும் மாணவ மாணவியரின் நட்பு இவையெல்லாம் போனஸாக கிடைக்குமே! இப்படி உங்க படிப்பு முடியும் தருவாயில் கல்வியறிவை தாண்டி வேற என்னெல்லாம் பெற முடியும் என யோசித்து அதற்கு உழைக்க வேண்டும்.

வேலையும் அப்படித்தான்! வேலைக்காக மட்டும் உழைத்தால் சந்தேகமே இல்லை நல்ல ஊதியம் கிடைக்கும். ஆனால் உங்களையும் முன்னேற்றிக் கொள்ள சேர்ந்து உழைத்தால் வளமான எதிர்காலம் கிடைக்கும். ஓகே !வேலையில இன்கிரிமெண்ட் கிடைக்கணும் அப்படின்னா மேனேஜ்மென்ட் கூட சண்டை போட்டா கிடைக்காது! நம்முடைய திறமையை வெளிப்படுத்தினா ஆட்டொமாடிக்கா கிடைக்கும்.

எப்படி வெற்றி படியில் ஏறுவது? ஒரு வெறியோட முதல் படியிலிருந்து ஐந்தாவது படியில் எட்டி காலை வைத்தால் அப்படியே பின்னாடி சாய்வதற்கு வாய்ப்பிருக்கிறது. அதனால படிப்படியாக மேலே ஏறணும்.

ஜான் எஃப் கென்னடி, அமெரிக்காவின் முன்னாள் பிரதமர் ஒரு உரையில் சொல்கிறார். “நாடு உனக்கு என்ன செய்தது அப்படின்னு யோசிக்காதே! வாழ்க்கையில படிப்படியா உயரச் செய்து, ஒரு நிலைக்கு கொண்டு வந்த நாட்டிற்கு, நாட்டு மக்களுக்கு நீ திரும்ப என்ன செய்ய முடியும் என்று யோசி” என்று.

இன்றைக்கு கல்லூரியை முடித்து வேலைக்குப் போகும் பல இளைஞர்கள் அந்த வேலையை ஒரு வருடம் கூட பார்த்து முடிக்காமல் “இன்னும் கொஞ்சம் பெட்டர் ஜாப் ட்ரை பண்றேன்” அப்படின்னு சொல்றாங்க .அவங்க டிக்ஷனரியில் பெட்டர் அப்படின்னா என்ன? இப்ப பாக்குறத விட அதிகமான வேலையா ?இல்ல! இல்ல !அதே வேலைதான் பெட்டர் சம்பளம். அப்போ நீங்க உங்க திறமையில பெட்டரா இருக்கணும் அப்படின்னு அதிக சம்பளம் கொடுக்கிற முதலாளி யோசிக்க மாட்டாரா?

ஆக உங்கள் ஸ்கில்ஸை டெவலப் பண்ண முதல்ல உழையுங்க! உங்க லாங்குவேஜ் உங்க vocabulary இதெல்லாம் பெட்டராக நீங்க உங்களால் ஆன முயற்சிகளை செய்யுங்க! வெற்றி உங்க பக்கத்துல வரும்!

ஜெயா ரங்கராஜன்
வாழ்வியல் பயிற்சியாளர்
Life Coach.

Series Navigation<< ரிஸ்க் எடுக்க தயங்காதீங்க!சுய கட்டுப்பாடு – நிச்சயம் தேவை! >>

About Author

One Reply to “அடுத்த சவால் என்ன?”

  1. நல்ல கருத்துகள்.  ஆனால் இந்த ஐடி யுகத்தில் ஒரே தகுதியுடைய இரு வெவ்வேறு ஆட்களுக்கு வெவ்வேறு நிறுவனத்தில் வெவ்வேறு ஊதியம்தான் நிர்ணயிக்கப்படுகிறது!

Comments are closed.