தற்பெருமை

இறக்கி வையுங்க!

This entry is part 4 of 10 in the series வாழ்வியல்

வெற்றி படிக்கட்டுகளில் ஏறும்பொழுது நாம் கீழேயே விட்டுவிட வேண்டிய சில விஷயங்கள்.

நாம்ப ரயில்ல பயணம் செய்யும்பொழுது கதவருகில் ஒரு வாசகம். பார்த்திருப்போம் – “Less Luggage More Comfort”. வாழ்க்கையின் எந்த விஷயத்திற்கும் அது பொருந்தும்.முக்கியமாக, ஒரு இலட்சியத்தை அல்லது ஒரு இலக்கை நோக்கி நாம் பயணம் செய்யும்பொழுது அப்படி இறக்கிவைக்க வேண்டிய சில habitsஐ பார்ப்போமா?

நாம்ப ஒரு இலக்கை நோக்கி போகும் பொழுது நமக்கு கிடைக்கும் சின்ன சின்ன வெற்றிகள் நம்மை மேலும் ஊக்கப்படுத்தும் என்பதில் சந்தேகமேயில்லை.

ஒரு இருபது அல்லது முப்பது வருடங்களுக்கு முன்னால் வந்த தமிழ் சினிமாக்களில் பார்த்தோமானால் படம் ஆரம்பிக்கும்பொழுதே ஒருவர் “வெற்றி! வெற்றி! என்று கூவிக்கொண்டே வருவார். அதாவது symbolic ஆக நல்ல வார்த்தையுடன் படம் தொடங்கினால் வெற்றிகரமாக ஓடும் என்ற நம்பிக்கை. ஆனா இப்பல்லாம் அப்படி இல்லை. “அண்ணே தட்டிடலாமா” என்று ஆரம்பித்தால்தான் படம் success.நமக்கு கிடைக்கிற ஆரம்ப கால வெற்றிகள் நம்மை மேல் நோக்கி போக விடாம நம்ம தலையில ஏறி உட்கார்ந்துகிட்டு நம்மை அழுத்தினா அதை நிச்சயமா கீழே இறக்க வேண்டியதுதான்.அப்படி ஏறி உட்காரும்பொழுது நாம்ப செய்யறது எல்லாமே சரி அப்படின்னு தான் தோணும்.

என்னுடன் அலுவலகத்தில் ஆரம்ப காலங்களில் பணியாற்றியவர் திரு திவாகர். சிறிது காலத்திற்கு பின் சொந்தமாக financial consultancy ஆரம்பித்தார். அவர் ஆரம்பித்த வேளை “mutual fund” ஓஹோ என்று களை கட்ட தொடங்கியிருந்த நேரம். அவருக்கு பிசினெஸ் நன்றாக பிக் அப் ஆக தொடங்கியது. அவர் சுவாசிப்பதும் நேசிப்பதும் financial consultancy ஆகியது. He enjoyed his business and earned a good money.முதலீடு ஆலோசகர் என்றால் திவாகர் தான் என்ற அளவிற்கு நகரத்தின் பெரிய தொழிலதிபர்கள் எல்லாம் அவருடைய வாடிக்கையாளர்களாக இருந்தார்கள்.

ஒரு நாள் அவருக்கு மும்பையின் அதி முக்கியத்துவம் வாய்ந்த diamond jewellery கம்பெனியின் நிர்வாக அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. பேசியவர் நிர்வாக இயக்குனர் திரு சரண் அவர்களுடைய உதவியாளர். திரு சரண் அவர்கள் குறிப்பிட்ட தேதியில் சென்னை வருவதாகவும், சென்னையில் உள்ள ஒரு பெரிய தொழில் அதிபர் திவாகரை financial consultingக்காக சிபாரிசு செய்ததால், திரு சரண், திவாகரை சந்திக்க விரும்புவதாகவும், அவருக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.திவாகருக்கு தலை கால் புரியவில்லை. இந்த சந்திப்பு வெற்றிகரமாக முடிந்தால், இந்த தொடர்பின் மூலமாக மேலும் தன் consulting .சென்னையை தாண்டியும் விரிவடையும் என மனக்கோட்டை கட்ட ஆரம்பித்தார்.

குறிப்பிட்ட நாளில் திரு சரணை சந்தித்து கை குலுக்கிய பொழுது “உங்களை பற்றி சொல்லுங்கள் திவாகர்” என்றார் திரு சரண்.

அவ்வளவுதான். தன் கடையை விரித்தார் திவாகர். தன்னுடைய வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் இருக்கும் துறை, அவர்களுக்கு தான் கொடுத்த பலதரப்பட்ட ஆலோசனைகள் என உற்சாகமாக தன் வெற்றியை பேசிக்கொண்டே போனார். நடுவில் தப்பி தவறி கூட திரு சரணிடம் அவருடைய தேவைகள் என்ன, எப்படிப்பட்ட ஆலோசனையை எதிர்பார்க்கிறார் என கேட்கவில்லை. கண்ணை மூடி திறப்பதற்குள் அவருக்கு கொடுத்த ஒரு மணி நேரம் முடிந்தது. “நன்றி திரு திவாகர்” என்று கையை குலுக்கி விட்டு உள்ளே போய் விட்டார் திரு சரண்.

திவாகருக்கு ஒன்றும் புரியவில்லை. “திரு சரண் அவருடைய தேவையை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே” என்று நினைத்தார். தான் பேசியதை மனதிற்க்குள் ஒரு தடவை ஓட்டி பார்த்தார். “நான் சரியாகத்தான் பேசினேன்” என்று தீர்மானித்தார்.

இரண்டு நாட்கள் கழித்து அவருக்கு திரு சரணிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. “உங்கள் பொன்னான நேரத்தை என்னோடு செலவழித்ததற்கு மீண்டும் நன்றி திரு திவாகர். நான் என்னுடைய பண முதலீடு பற்றி வேறு வழிகளில் தீர்மானித்து விட்டேன்” என்று.

திவாகருக்கு தான் ஒரு மிகப்பெரிய பிசினஸ்ஸை இழந்து விட்டோம் என புரிந்தது. ஆனால் ஏன். என்று தான் தெரியவில்லை.அதே நேரத்தில் திரு சரண் நினைத்துக்கொண்டார் “என்ன ஒரு ego! தன்னுடைய பெருமையையே பேசினாரே தவிர என்னுடைய தேவை என்ன என்று அந்த ஆலோசகர் கடைசி வரை கேட்கவே இல்லையே” என்று.

ஆக, அடுத்தவர் தேவையை காதுகொடுத்து கேட்காமல், நான்தான் வெற்றியாளன் என்று உங்கள் பெருமையை மட்டும் பேசிக்கொண்டிருந்தால் அது உங்களை அடுத்த படி ஏற விடாது.உங்கள் தற்பெருமை என்னும் luggageஐ கொஞ்சம் கீழே இறக்கி வைக்கலாமா?

ஜெயா ரங்கராஜன்
வாழ்வியல் பயிற்சியாளர்
(Life Coach)

Series Navigation<< தயங்காம சொல்லுங்க!உங்க அணுகுமுறை எப்படி? >>

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.