ரிஸ்க் எடுக்க தயங்காதீங்க!

This entry is part 6 of 10 in the series வாழ்வியல்

திருமதி மார்கரெட் தன் வாழ்கையையே செவிலியர் பணிக்கு அர்பணித்தவர். திருமணமே செய்து கொள்ளாமல், நடுகடலிலேயே பணியாற்றி ஒய்வு பெற்றவுடன் துறைமுக ஓரமாக ஓர் வீட்டை எடுத்துக்கொண்டு வசிக்க ஆரம்பித்தார்.

எப்பொழுதும் தனிமையையே விரும்பினார்.அவருக்கு துணையாக ஒரு ஜோடி love birds.அந்த பறவைகளும் அந்த வீட்டை கடந்து வெளி உலகத்தை பார்த்ததில்லை.ஒரு நாள் மாலை, வழக்கம் போல உணவு பொருட்கள் வாங்கி வர மார்கரெட் வெளியே கிளம்பினார், ஞாபகமாக வீட்டை பூட்டிக்கொண்டு.
அடுத்த ஐந்தாவது நிமிடம் “வார்தா” புயல் போல் காற்று வீச ஆரம்பித்தது. மார்கரெட் ஓர் சூப்பர் மார்க்கெட் உள்ளே சென்று பாதுகாப்பாக நின்று கொண்டார்.
வேகமாக அடித்த காற்றில் அவர் வீட்டு பழமையான ஜன்னல் கதவுகள் இரண்டும் படீரென திறந்து கொண்டன.பளிச் என்று தெரிந்த வெளி உலகம் பறவைகளை குதூகல படுத்தியது. ஜன்னல் அருகே வந்து அமர்ந்து கொண்டன
.
“இது தான் நமக்கு நல்ல சந்தர்ப்பம். வெளியே பறந்து விடலாம்” என்று ஒன்று சொல்லியது.

“ஆனால் இப்பொழுது கிடைப்பது போல் நமக்கு உணவும் பாதுகாப்பும் கிடைக்குமா”? என்ற சந்தேகத்தையும் அதுவே எழுப்பியது.

“நாம் வெளியே போனால் கழுகுகள் நம்மை கொன்று விடும்” என்றது அடுத்த பறவை.

“நாம் நன்றாகத்தான் இருக்கிறோம் ஆனால் சுதந்திரமாக இல்லையே” என்றது முதல் பறவை.

நல்ல சந்தர்ப்பம் கிடைத்தும் “பறந்து விடலாமா வேண்டாமா?” என்ற குழப்பத்தில் நேரம் கடந்து கொண்டிருந்தது.

அடித்த காற்று அடங்கி, வீட்டுக்கு வந்த மார்கரெட் ஜன்னல் அருகே அமர்ந்திருந்த பறவைகளை பார்த்து பதறிப்போய் அவசரமாக ஜன்னல்களை மூடினார். ஏனென்றால் அவர் தனிமைக்கு ஒரே துணை அந்த இரு பறவைகள்தான்.துணிவு இல்லாததால் மீண்டும் அந்த இருட்டு அறையிலேயே முடங்கின அந்த பறவைகள்.

நம்மில் பலரும் அந்த பறவைகள் போலதான்….! வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு போவதற்கு பயந்து கொண்டு, இப்பொழுது இருக்கும் சௌகர்யம் இல்லாமல் போய் விடுமோ என்று அச்சப்பட்டுக்கொண்டு, இருக்கும் இடத்திலேயே முடங்கி கிடப்பவர்கள்.துணிச்சல்லாக முடிவு எடுப்பவர்கள், வெற்றியை நோக்கி பயணிப்பவர்கள், வழியில் வரும் இடர்களை சந்திக்க தயாராக இருப்பவர்கள்.

சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்றால் risk எடுத்துதான் ஆக வேண்டும். பாதுகாப்பு என்ற அறையிலிருந்து வெளியே வந்தால் தான் முன்னேற்றம் என்ற பாதையில் செல்ல முடியும்.

ஜெயா ரங்கராஜன்
வாழ்வியல் பயிற்சியாளர்
Life Coach

Series Navigation<< உங்க அணுகுமுறை எப்படி?அடுத்த சவால் என்ன? >>

About Author

One Reply to “ரிஸ்க் எடுக்க தயங்காதீங்க!”

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.