குழந்தையில்லாதவர்களை எப்படி நடத்துவார்களென்பதை என் குடும்பத்திலேயே பார்த்துள்ளேன்.நானும் கொஞ்சம் பருமனான உடல்வாகுடையவள்தான். போதாக் குறைக்கு பிட்னெஸ் ட்ரிங்க்களும் 30 நாட்களில் எடைக் குறைக்கலாம் முகாம்களும் அதிகமாக வரத் துவங்கிய வேளை அது. அவசரமாக சாலையைக் கடக்கும்போது, பேருந்தில் என்று எங்கு பார்த்தாலும் அந்த விளம்பர நோட்டிஸ்கள் வம்படியாக என் கைகளில் திணிக்கப்பட்டன. குண்டாக இருந்தால் குழந்தை பிறக்காது என வேறு கூறிச் சென்றனர். இதென்ன முருகா சோதனை. அப்படியொரு கஷ்டத்தை எனக்கு கொடுத்து விடாதே. எனக்கு நல்லபடியாக திருமணம் முடிந்து முதலில் நீயே வந்து பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.அப்படி பிறந்தால்………
Category: ஆன்மிகம்
வீரபத்திரச் சருக்கம்( இரண்டாம் பகுதி)
அத்தியாயம்-3 தக்ஷனின் யாகத்திலிருந்து வெளியேறிய ததீசி முனிவரை நாரதர் வழி மறித்தார். நேரே கயிலாயம் சென்று உமா மகேஸ்வரனை மனந்தினாலும், நாவினாலும், உடலினாலும் சிந்தித்து, துதித்து வணங்கி நடந்தவற்றை முறையிட்டார். “இல்லை நாரதா! தக்ஷன் “வீரபத்திரச் சருக்கம்( இரண்டாம் பகுதி)”
தெய்வங்களின் உபவாஸம்
கிராம தேவதையை விட்டுட்டு பெருமாள், சிவன் ஆலயங்களுக்கு வருவோம். (பெருமாள் கோவிலில் தளிகைன்னு சொல்வாங்க சிவன் ஆலயத்தில் நைவேத்யம்னு சொல்வாங்க). அந்த தளிகை, நைவேத்யம் தினமும் நடக்கிறதா என்றால் பதில் இல்லையென்று தான் வரும். நித்யப்படி அபிஷேகத்துக்கு கூட வழியில்லாமல் எத்தனையோ ஆலயங்கள் இருக்கிறது. ஒருவேளை விளக்கெரியக் கூட எண்ணெய் இல்லாமல் இருக்கிறது. பல கோவில்களில் பூஜை பண்றதுக்கு கூட அர்ச்சகர் இல்லை. ஸ்வாமி மேல் பரிதாபப்பட்டு ஒரு சிலர் தனக்கு தெரிந்த மாதிரி அபிஷேகம் பண்ணிட்டு போறதை பல இடங்களில் பார்க்கலாம்.
அம்பாள் உபாசனை – ஸ்ரீவித்யா உபாஸனை
அம்பாளைத் தியானிக்க முயன்று அதில் ஒரு முகமாக ஈடுபட முடியாதபோது நம் குறையெல்லாம் தெரிகிறது. அதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான். ‘இந்தக் குறைகளைப் போக்கம்மா’ என்று அவளிடம் பிரார்த்தித்துக் கொள்ள முடிகிறது. என்னிடம் எப்போதெல்லாம் தோஷம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அம்பாளிடம் முறையிட்டு அந்த தோஷம் இனியாவது இல்லாமலிருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்
உள்ளூர் கோவில்கள்
வெகுதொலைவில் இருக்கும் ஆலயங்களை சென்று தரிசிக்கும் நீங்கள் உங்கள் ஊர் ஆலயங்களை உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஆலயங்களையும் வாரம் ஒருமுறையாவது சென்று தரிசனம் செய்து விட்டு வரலாம். நம் உறவினர்கள் என்னப்பா உள்ளூர்ல இருந்துகிட்டே என்னை பார்க்க வரமாட்டேங்கிறியே என்று சொல்வார்கள் அது போலத்தான் நம் ஊர் தெய்வங்களும். இவன் உள்ளூரில் இருந்து கொண்டே நம்மை பார்க்க வரமாட்டேங்கிறானே நாம் ஏன் இவனுக்கு நல்லது செய்யணும் என்று ஒரு கணம் நினைத்து விட்டால் போதும் உங்கள் வாழ்க்கை கேள்விக்குறிதான். தெய்வம் அவ்வாறு நினைக்காது என்பது வேற விஷயம்.
சோளிங்கர் நரசிம்மர் கோவில்
அந்த அமிர்தவள்ளித் தாயார் முன் நின்று மனம் உருக முழு நம்பிக்கையோடு அம்மா உன் குழந்தை நான் வந்திருக்கிறேன். எனக்கு உன்னை விட்டால் யார் இருக்கா? என்னுடைய குறையை யாரிடம் போய் நான் சொல்ல முடியும்? நீ தான் என்னோட குறையை தீர்த்து வைக்கணும்னு சொல்லி உங்க பிரச்சினையை சொல்லுங்க. அவ கண்டிப்பா தீர்த்து வைப்பான்னு நம்பிக்கையோட அவ கிட்டே சொல்லுங்க. உங்க அம்மா கிட்டே நீங்க எப்படி பேசுவீங்களோ அந்த உரிமையில் பேசுங்க. அவ கண்டிப்பா பண்ணுவா. எந்த அம்மாவும் தன்னோட குழந்தை கஷ்டப்படறதை பார்த்துட்டு சும்மா இருக்கமாட்டா. லோகத்தில் எந்த அம்மாவும் கெட்ட அம்மா கிடையாதுன்னு பெரியவா சொல்லியிருக்கார்.
பாசுரப்படி ராமாயணம் – 6
அகலிகைக்கு சாப விமோச்சனம் வழங்கிய பின் முனிவனும் அரச குமாரர்களும் மிதிலை வந்தடைந்தனர். கல்லைப் பெண்ணாக்கிக்காரார் திண் சிலை இறுத்துஅங்கு ஜனக மஹாராஜா ஏற்பாடு செய்திருந்த வெளிவியில் சிவ தனுசு என்ற வில்லை நாண் “பாசுரப்படி ராமாயணம் – 6”
பாசுரப்படி ராமாயணம் – 5
தாடகை வதம் முடித்து விஸ்வாமித்ரர் வேள்வி காத்து முனிவரும் தசரத சக்ரவர்த்தியின் குமாரர்களும் அடர்ந்த காடு வழியே நடந்து சென்றனர். வழி முழுதும் மாமுனிவன் பாலகர்களுக்கு அந்த இடத்தின் சிறப்பு, வரலாறு என்று நடமாடும் “பாசுரப்படி ராமாயணம் – 5”
பாசுரப்படி ராமாயணம் – 4
விஸ்வாமித்ரர் தேவர்களுக்காக செய்த வேள்வியை, 6 நாட்கள், இரவும் பகலும், கண்ணை இமை காப்பது போல் இந்த மண்ணை ஆளும் தசரத சக்ரவர்த்தியின் புதல்வர்கள்,கற்பனைக்கு எட்டாத , நினைத்து பார்க்கவே முடியாத அளவுக்கு, நின்று காத்தார்கள்.
பாசுரப்படி ராமாயணம் – 3
தயரதன் தன் மகனாய்த் தோன்றிக் குணம்திகழ் கொண்டலாய் மந்திரம்கொள் மறைமுனிவன் வேள்விகாக்க நடந்து, தசரத சக்ரவர்த்தியின் மகனாகப் பிறந்து, மழை தரும் மேகம் போன்று கருமையாகவும், இனிமையாகவும், எல்லோரும் விரும்பு குணத்தவனாகவும் திகழும் ஸ்ரீ “பாசுரப்படி ராமாயணம் – 3”