Whatsapp Desktop Beta – How to get it ?

This entry is part 1 of 4 in the series Whatsapp UWP Beta

வாட்ஸ் அப் நிறுவனம் தனது செயலிகளை தொடர்ந்து மேம்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே. தந்து ஆண்ட்ராய்ட் / ஐ ஒ எஸ் செயலிகளில் மாற்றங்களை கொண்டுவந்த நிறுவனம் இப்பொழுது விண்டோஸ் டெஸ்க்டாப் செயலிகளை இப்பொழுது மேம்படுத்தியுள்ளது. இதனை பீட்டா பதிவை நீங்கள்நீங்கள் விரும்பினால் உங்களது விண்டோஸ் கணிணியில் நிறுவிக்கொள்ளலாம். Whatsapp Desktop Beta வை பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும். பின்பு அந்த தளத்தில் இருந்து “Get” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும். இப்பொழுது உங்கள் கணிணியில் உள்ள விண்டோஸ் ஸ்டோர் ஓபன் ஆகும். அங்கிருந்து இன்ஸ்டால் செய்யலாம். இந்த புதிய வாட்ஸ் அப் பீட்டாவை இன்ஸ்டால் செய்ய உங்கள் கணிணியில் குறைந்தது விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இருக்க வேண்டும்.

எச்சரிக்கை : பீட்டா பதிப்பு சில சமயம் பிரச்சனை வரலாம்.

இன்ஸ்டால் செய்தவுடன் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது கீழே ஸ்க்ரீன் ஷாட் பகிர்ந்துள்ளேன்.

  1. இன்ஸ்டால் ஆனவுடன் “Get Started ” என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
  2. அடுத்த ஸ்க்ரீனில் “QR Code ” இருக்கும்.
  3. இப்பொழுது உங்கள் மொபைலில் வலது மேல் மூலையில் இருக்கும் மூன்று புள்ளிகளை தொடவும்.
  4. பின் ” Linked Devices ” தேர்வு செய்யவும்
  5. அடுத்து ‘ Link device ” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
  6. இப்பொழுது “QR Code ” ஐ ஸ்கேன் செய்யவும்.
  7. கணிணியில் “downloading recent messages” என்று காட்டும். அது நூறு சதவீதத்தை எட்டியவுடன் நீங்கள் இதை உபயோகிக்க துவங்கலாம்.

இந்த புதிய whatsapp desktop beta UI பழைய பதிப்பை விட நன்றாக உள்ளது. அதே போல் இதில் கான்டெக்ட் இன்போ விவரங்கள் பழையதை விட எளிதாக கையாளும் விதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. கீழே ஒரு சிறு உதாரணம், இது புதிய வாட்ஸ் அப் பீட்டா பதிப்பில் இருக்கும் செட்டிங்ஸ் மெனு. எளிதில் மாற்றும் படி உள்ளது.

அதே போல் கான்டெக்ட் இன்போ மெனுவும்.

whatsapp desktop beta
Series NavigationWhatsapp UWP app 2.2145.3.0 – Windows 10/11 >>

About Author

One Reply to “Whatsapp Desktop Beta – How to get it ?”

Comments are closed.