டெலிகிராம் போன்ற பிற செயலிகளில் வெகு நாட்களாக இருந்து வரும் ” Edit message ” வசதியை இப்பொழுது வாட்ஸ் அப் செயலி அறிமுகம் செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று வாட்ஸ் அப் நிறுவனத்தின் ப்ளாகில் வெளியாகி உள்ளது. இந்த வசதி பலருக்கும் உபயோகமாக இருக்கும். நீங்கள் தவறாக எழுத்துப் பிழைகளுடன் அனுப்பி விட்டால் அதை திருத்திக் கொள்ளலாம் அல்லது அனுப்பிய தகவலில் மாற்றங்கள் வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம்.
Category: Whatsapp
Chat Lock – Whatsapp
Chat Lock என்ற புதிய ஒரு ஆப்ஷனை புதிதாய் அறிமுகப்படுத்தி உள்ளது வாட்ஸ் அப் நிறுவனம். ஒவ்வொருவருக்கும் சில தனிப்பட்ட உரையாடல்கள் இருக்கும். அது அவர்கள் தொழில் ரகசியங்கள் அல்லது மிக தனிப்பட்ட உரையாடல்கள் என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த சாட் விஷயங்களை மற்றவர்கள் அறிந்து கொள்ளக்கூடாது என அவர்கள் நினைக்கலாம். அப்படிப்பட்ட அரட்டைகளை எப்படி லாக் செய்வது என பார்ப்போம்.
Bottom navigation bar – Whatsapp
தொடர்ந்து பல மாற்றங்களை கொண்டு வந்து கொண்டிருக்கும் வாட்ஸ் அப் செயலியில் இப்பொழுது புதிதாக அதன் வடிவமைப்பை சிறிது மாற்றம் செய்துள்ளனர். வழக்கம் போல் பெரிய அளவிலான மாற்றம் இல்லை. இப்பொழுது இருக்கும் வடிவமைப்பில் சிறிய மாற்றமாக Bottom navigation bar கொண்டுவந்துள்ளனர்.
Users DP to be displayed in Whatsapp groups
வழக்கம் போல் புதிதாய் ஓர் மாற்றத்தை வாட்ஸ் அப் செயலியில் கொண்டுவந்துள்ளது மெட்டா நிறுவனம். இது ஒரு புதிய வசதி என்று சொல்ல இயலாது. ஒரு சிறு மாற்றம் என வேண்டுமானால் சொல்லலாம். இதனால் உபயோகிப்பாளரின் பிரைவசி பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த புதிய மாற்றம் ” Users DP to be displayed in Whatsapp groups “
Voice Status in Whatsapp
வாட்ஸ் அப் செயலியில் பல்வேறு விதமான ஸ்டேட்டஸ் மெசேஜ் அப்டேட் செய்யமுடியும் என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக, வீடியோ / போட்டோ மற்றும் சாதாரண வார்த்தைகள் என அப்டேட் செய்ய முடியும். ஆனால் இது வரை வாய்ஸ் ரெக்கார்டிங் ஸ்டேட்டஸ் மெசேஜ் வைக்க வாய்ப்பு இருந்ததில்லை. இப்பொழுது ” Voice Status in Whatsapp ” என்ற புதிய வசதியை பரிசோதித்து வருகிறது வாட்ஸ் அப் நிறுவனம். இப்பொழுது இது பீட்டா சோதனை பதிவு உபயோகிக்கும் சிலருக்கு மட்டுமே வந்துள்ளது. எப்படி வாய்ஸ் ஸ்டேட்டஸ் வைப்பது என பார்ப்போம் .
Transfer Whatsapp Chats without Google drive
இப்பொழுது நீங்கள் புது மொபைல் வாங்கி உங்கள் வாட்ஸ் அப் சாட்களை புதிய மொபைலுக்கு மாற்ற வேண்டுமென்றால், முதலில் பழைய மொபைலில் உள்ள சாட்களை கூகிள் ட்ரைவிற்கு பேக் அப் செய்ய வேண்டும். பின் புதிய மொபைலில் வாட்ஸ் அப் செயலியை இன்ஸ்டால் செய்து பின் கூகிள் ட்ரைவில் இருந்து மீண்டும் பேக் அப் எடுத்தவற்றை டவுன் லோட் செய்ய வேண்டும். இனி இதற்கு அவசியம் இருக்காது. எளிதாக உங்கள் சாட்களை மாற்றும் வசதியை ( Transfer Whatsapp Chats )இப்பொழுது சோதனை செய்து வருகிறது வாட்ஸ் அப் நிறுவனம்.
Search for Polls – WhatsApp
சமீபத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் சில புதிய வசதிகள் கொண்டு வரப்போவதாக அறிவித்து இருந்தது. அதில் சில வாட்ஸ் அப் கம்யூனிட்டிஸ், 32 பேர் வீடியோ கால் மற்றும் வாக்கெடுப்பு ( Poll). இப்பொழுது “Search for Polls – WhatsApp”
Create Avatar in Whatsapp
Meta நிறுவனத்தின் பேஸ்புக் செயலியில் உபயோகிப்பாளர்கள் அவர்களுக்கேற்ற ” Avatar ” உருவாக்கிக் கொள்ளலாம். அதை பல்வேறு பதிவுகளில் பின்னூட்டம் அளிக்கும் பொழுதோ அல்லது நமது பதிவிலோ உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அதை போன்றே இப்பொழுது “Create Avatar in Whatsapp”
Caption bar Documents sharing – Whatsapp
வாட்ஸ் அப் செயலியில் நாம் படங்கள் அல்லது வீடியோ பகிரும் பொழுது அந்த படத்தின் கீழே நாம் “caption ” இணைத்து பகிரலாம். யாருக்கு பகிர்கிறோமோ அவர்கள் வீடியோ எதை பற்றியது என புரிந்து கொள்ள உதவும். ஆனால் இந்த வசதி மீடியா கோப்புகளை பகிரும் பொழுது மட்டும் உபயோகப்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது. இப்பொ