சீராட்டி வளர்த்த பெண்ணை, ‘எங்கே அவளுடன் தன் குடும்ப செழுமையே கிளம்பிவிடுமோ’ என்ற அச்சத்தில்; அந்த பிள்ளை தன் பெண்ணை திருமணம் செய்துகொடுக்குமாறு கேட்கும்போது, தட்டிக் கழிப்பதற்காக “அவளுக்கு உப்பு போட்டுக்கூட சமைக்கத்தெரியாது” என்று பேயாழ்வார் கொடாக்கண்டனாய் மறுத்துச் சொல்லப்போக அவரோ விடாக்கண்டனாய் “பரவாயில்லை, நான் உப்பில்லாமலேயே சாப்பிடப் பழகிக்கொள்கிறேன்” என்று சொல்லி அவருக்கு வாய்ப்பூட்டு போட்டு ‘திரு’வைத்தட்டிக்கொண்டு வந்துவிட்டாரே!
Category: பொது
வந்தார்கள், தோற்றார்கள் – 1
அலெக்சாண்டர் என்கிற புயல் கிரேக்கத்தை ஒருங்கிணைத்து, பாரசீகத்தையும் வென்று வெற்றிக் களிப்புடன் பாரதத்தை நோக்கி மய்யம் கொண்டிருந்த சமயம் மிகச் சிறந்த அறிவாளியும், திறமைசாலியும், தாய் நாட்டு பற்றுக்கொண்டவனும், அரசியல் ஞானியும், தைரியசாலியுமான சாணக்கியன், சந்திர குப்தனையும் வேறு சில இளவல்களையும் ராஜ்ஜிய பரிபாலன கலைகளில் பயிற்று வித்துக் கொண்டிருந்தான்.
Label – Web Series
வழக்கமாய் வட சென்னை என்றவுடன் நாயகன் அங்கிருக்கும் பல கும்பல்களில் ஒருவனாய் இருப்பான். அவ்வாறு இல்லாமல் கொஞ்சம் மாற்றி எடுத்துள்ளனர். நாயகனின் இளம் வயதில் நடக்கும் ஒரு சம்பவம் எப்படி பின்னால் அவனை பாதிக்கிறது என்பது கதையின் ஊடாய் வந்துள்ளது.
காற்றில் கலையும் மேகங்கள்
பையனுக்கு நல்ல படிப்பு மாத்திரம் கொடுத்தால் போதும். அவன் வாழ்க்கையை அவன் போக்குல அவன் பார்த்துக்கப் போறான்.
வெளிநாட்டுல போய் செட்டில் ஆன பசங்க இங்க அவங்கப்பா, அம்மா கஷ்டப் பட்டு வாங்கின.. கட்டின வீட்டை என்ன பண்றதுன்னு தெரியாம வீட்டை நல்ல படியா பார்த்துக்க ஆட்களைத் தேடி அலையறதை பார்க்கலியா நீங்க ரெண்டு பேரும் !? “
Whatsapp channels
ஜூன் மாதம் புதிதாய் Whatsapp channels கொண்டுவரப்போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்து இருந்தது. முதலில் சில நாடுகளுக்கு மட்டும் வந்த இந்த வசதி இப்பொழுது 150 நாடுகளுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாய் அறிவித்துள்ளது. இது ஆண்ட்ராய்ட் + ஐ ஓ எஸ் மற்றும் டெஸ்க்டாப் என்று அனைத்திலிருந்தும் உபயோகப்படுத்த முடியும்.
என்ன பேரு வைக்கலாம்? எப்படி அழைக்கலாம்?
ஒன்று ஒருவருக்குச் சொந்தமானது; ஆனால், அதை அவர் உபயோகிப்பதை விட மற்றவர்கள்தான் அதிகம் உபயோகிப்பர்; அது என்ன? ” என்று கேட்டு, அது “அவரது பெயர்” என்று பதில் சொல்வது பிரசித்தி பெற்ற சுவாரசியமான கேள்வி -பதில்.’பெயர்’ என்பது ஒரு மனிதனின் வாழ்வில் மிக மிக முக்கிய அங்கம். அதே பெயர்கள் அடை மொழிகள் சேர்க்கப்பட்டு, சிதைக்கப்பட்டு, சில சமயம் பெயரே காணாமல் போய், ஒரு ஜடப் பொருளோ, ஒரு உயிரினமோ கூட ஒருவரைக் குறிக்கும் அளவு ஆகி விடுவதும் உண்டு. என் அனுபவத்தில், சிறுவயது முதலே இதுகுறித்து மிகவும் வியந்திருக்கிறேன்.
VPN – Virtual Private Network – மெய்நிகர் தனிப் பிணையம்
VPN நமக்கு எந்த அளவிற்குப் பயன்படும் என்கிற கேள்வியும் இங்கே முக்கியமாக ஆராயப்பட வேண்டும், நம் அனைவருக்கும் VPN அவசியப்படாது. காரணம், தற்போது பெரும்பாலான இணையச் சேவைகள் குறிமுறையாக்கத்தில் தான் இயங்குகின்றன. வலைத்தள முகவரியில் https என்ற பதத்தை பலர் கவனித்து இருக்கலாம், இதில் இருக்கும் ‘s’, secure என்பதைக் குறிக்கும். இவ்வகை வலைத்தளங்கள் செய்யும் தகவல் பரிமாற்றம் குறிமுறையாக்கம் செய்யப்பட்டே நடக்கும் – உதாரணமாக உங்கள் வங்கிக் கணக்கை online மூலம் பார்ப்பது முதல், உங்கள் சமூக வலைத்தளப் பக்கம் வரை தற்போது அனைத்தும் குறிமுறையாக்கப் பரிமாற்றம் தான்.
தஞ்சாவூரும் பாதாம் கீரும்
இப்போதெல்லாம் டாக்டர் நரசிம்மன் உபயத்தில் பையன்கள் ஊருக்கு வந்தால்தான் அதை வாங்குகிறேன்! என் லிபிட் புரொஃபைலைப் பார்த்தவுடனேயே நரசிம்மன் கேட்டுவிடுவார், “என்ன ஜப்பானீஸ் கேக்கா?”
அய்யயோ! என்னது பாதாம் கீரா? ”ரெண்டாயிரத்துப்பதினஞ்சு ஃபிப்ரவரி 25ஆம் தேதிலேர்ந்து பாதாம் கீரே தொடறதில்லை நானு!”
பாசுரப்படி ராமாயணம் – 6
அகலிகைக்கு சாப விமோச்சனம் வழங்கிய பின் முனிவனும் அரச குமாரர்களும் மிதிலை வந்தடைந்தனர். கல்லைப் பெண்ணாக்கிக்காரார் திண் சிலை இறுத்துஅங்கு ஜனக மஹாராஜா ஏற்பாடு செய்திருந்த வெளிவியில் சிவ தனுசு என்ற வில்லை நாண் “பாசுரப்படி ராமாயணம் – 6”
சுய கட்டுப்பாடு – நிச்சயம் தேவை!
நாம் தெருவில் தனியாக நடந்து போய் கொண்டிருக்கும் போது, தெருவில் மக்கள் நடமாட்டமே இல்லை என்றாலும் குப்பையை போடவோ, எச்சில் துப்பவோ கூடாது. ஒரு கட்டு ரூபாய் நோட்டுக்கள் தெருவில் கிடந்தாலும், யாரும் பார்க்கவில்லையே என எடுத்துவிட முடியுமா? பார்க்காத விஷயத்தை பார்த்தது போல சொல்ல முடியுமா?