ஜீவன் கிரன்

ஜீவன் கிரன் – டெர்ம் இன்ஸ்யூரன்ஸ்

பாலிசி காலத்தில் பயனர் இறந்தால் காப்பீட்டுத் தொகை நாமினிக்கு மொத்தமாக கிடைக்குமாறு செய்யலாம் அல்லது ஐந்தாண்டுகளுக்கு மாதாமாதம் / காலாண்டுக்கு ஒரு முறை / 6 மாதங்களுக்கு ஒரு முறை / ஆண்டுக்கொருமுறை பிரித்து கிடைக்குமாறு செய்யலாம்.

Chakravyuham: The Trap

Chakravyuham: The Trap

கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட கத்தியில் சஞ்சயின் கை ரேகை இருக்க அவனை கைது செய்து அழைத்து செய்யும் வழியில் அவன் தப்பிவிட , அவனை போலிஸ் துரத்தும் அதே சமயத்தில் அவனது நண்பனும் கொலையாகிறான். சில திருப்பங்களுக்கு பிறகு சஞ்சயின் மேனேஜரும் அவன் அலுவலகத்தில் வேலை செய்யும் ஷில்பாவும் தான் கொலையின் சூத்திரதாரிகள்

Threads by Instagram

Threads by Instagram

இந்த செயலியில் நீங்கள் சேர , உங்களுக்கு இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இருக்க வேண்டும். இதற்கென தனி கணக்கை உருவாக்க இயலாது. ஏற்கனவே இன்ஸ்டாகிராம் கணக்கு இருந்தால் சேர்ந்து கொள்ள இயலும். அதே போல் , இன்ஸ்டாவில் என்ன உபயோகிப்பாளர் பெயர் உள்ளதோ அதையேதான் இங்கும் உபயோகிக்க முடியும்.

Whatsapp Channels

Introducing Whatsapp Channels

டெலிகிராம் செயலியில் இருந்து வாட்ஸ் அப் கொண்டு வந்திருக்கும் மற்றுமொரு விஷயம் ” Whatsapp Channels “. இந்த மாத துவக்கத்தில் இதை பற்றி தங்களது அதிகாரபூர்வ வலைத்தளத்தில் அறிவித்திருந்தது வாட்ஸ் அப் நிறுவனம்.

தலைமுறை தாண்டிய நேசம்

இது எங்க  வீட்டு விசேஷம் தான்.அம்மா சைடு. அதனால கல்யாண ஏற்பாட்ல ஏதாவது சில பொறுப்புகளை நாம செய்யனும்னு அம்மா சொன்னாங்க. இவங்க தான் என் அம்மா என அருகிலிருந்த முதிய பெண்மணியை காட்டினார். இவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. ஆனால் நினைவுக்கு வரவில்லை. அந்த அம்மா கிருஷ்ணாவிடம் நீ மேலேயே நின்னு என்ன வேணுமோ அத செய் என்றார்.

Privacy features

Privacy Checkup – Privacy feature

வாட்ஸ் அப் செயலியில் பிரைவசி செட்டிங்ஸ் பொறுத்தவரை தொடர்ந்து பல மாற்றங்களை தந்து கொண்டு வருகிறது மெட்டா நிறுவனம். சமீபகாலமாக வாட்ஸ் அப் உபயோகப்படுத்துவோர் தொடர்ந்து சந்தித்து வரும் பிரச்சனை சம்பந்தமில்லாத நபர்களிடம் இருந்து வரும் வாட்ஸ் அழைப்புகள் குறிப்பாய் வேலைவாய்ப்பு / வீட்டிலிருந்து சம்பாதிக்கக்கலாம் போன்ற ஏமாற்று வேலை செய்பவர்களிடம் இருந்துதான். இப்பொழுது ” Privacy Checkup ” என்ற புதிய வசதியை கொண்டுவந்துள்ளது மெட்டா நிறுவனம். இதை பற்றி இன்று அவர்களின் தளத்தில் அறிவித்துள்ளனர்.

Dahaad

Dahaad – என் பார்வையில்

இன்னும் ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களில் இருக்கும் பெண்களுக்கு எதிரான நிலை கதை நெடுக வந்து கொண்டே உள்ளது. அதே போன்று ஜாதி வேறுபாடுகள் பார்க்கும் சமுதாயத்தை பற்றியும்.கதையின் மிகப் பெரிய பலமாக நான் கருதுவது, வில்லன் யார் என தெரிந்தும் அதன் பின் கதை தொய்வடையாமல் அவனை எப்படி பிடிக்கின்றனர் எப்படி நிரூபிக்கினறனர் என கொண்டு சென்றுள்ளதே. இது போன்ற சீரியல் கில்லர் கதைகளில் வில்லன் தெரிந்துவிட்டால் கதையில் தொய்வு வந்துவிடும். அது இதில் இல்லை.

கங்கை உருவாகிறாள் – நதிகளின் சங்கமம் – 4

This entry is part 4 of 4 in the series கங்கை உருவாகிறாள்

பயணம் மிகவும் சிறப்பாகவே அமைந்தது.  இந்தப் பயணம் வழி பஞ்ச் ப்ரயாக் என்று அழைக்கப்படும் ஐந்து சங்கமங்களில் இரண்டு சங்கமங்களை நான் பார்த்ததோடு, உங்களுடனும் பகிர்ந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி.  உங்களுக்கும் இந்தப் பயணமும், பதிவுகள் வழி சொன்ன தகவல்களும் பிடித்திருக்கும் என நினைக்கிறேன்.  ஒரு சிலருக்கேனும் இந்தத் தகவல்கள் பயன்படக்கூடும் என்றும் நம்புகிறேன்.  இந்த பயணம் குறித்த தகவல்களை, பாகீரதி தளம் வழி பகிர்ந்து கொண்ட நண்பர் கார்த்திக் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.

கங்கை உருவாகிறாள் – நதிகளின் சங்கமம் – 3

This entry is part 3 of 4 in the series கங்கை உருவாகிறாள்

அலக்நந்தா – மந்தாகினி நதிகளின் சங்கமம் மற்றும் ருத்ரநாத் ஜி மந்திர் அனுபவங்கள் மனதில் மகிழ்ச்சியினை உண்டாகியிருக்க, குறுகிய சந்தின் வழி கீழே இறங்கி வந்து கொண்டிருந்தேன்.  ஒரு ஓரத்தில் சிறு கடை ஒன்று இருக்க, அங்கே இருந்த பலகை ஒன்றில் அமர்ந்து கொண்டு, கடைக்காரரிடம் பேச்சுக் கொடுத்தேன்.  தேநீர், காஃபி போன்றவை அருந்துவதை தவிர்த்து விட்ட பிறகு எலுமிச்சை ஜூஸ், லஸ்ஸி போன்றவை மட்டுமே அருந்துவதால் அப்படி எதுவும் கிடைக்குமா என்று பார்க்க ஷிக்கஞ்சி கிடைத்தது! ஷிக்கஞ்சி என்பது எலுமிச்சை சாறு, ஷிக்கஞ்சி மசாலா பவுடர், தண்ணீர் (அல்லது) சோடா கலந்து செய்யப்படுவது! எலுமிச்சை ஜூஸுக்கு அக்கா என்று வைத்துக் கொள்ளலாம் 🙂  அதை வாங்கி பருகியபடி கடைக்காரரிடம் பேச்சுக் கொடுத்தேன்.  ருத்ர ப்ரயாக் அருகே இருக்கும் கார்த்திக் சுவாமி கோவில் செல்ல எனக்கு யோசனை இருந்ததால் அவரிடம் கேட்க அவர் சொன்ன தகவல் என்னை கொஞ்சம் யோசிக்க வைத்தது.  

Asur

Asur – Season 1

இந்தியாவில் தொடர்ந்து நடக்கும் சீரியல் கொலைகள். கொலை செய்யப்படுபவர்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவர்கள். அவர்களின் ஒரு விரலில் பாதி மட்டும் வெட்டி எடுக்கப்படுகிறது. அர்ஷத் வார்ஷி தலைமையிலான ஒரு சிபிஐ குழு இந்த கொலைகளை விசாரிக்கிறது. இதன் நடுவே அர்ஷத்தின் மனைவியும் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். ஏற்கனவே சிபிஐயில் வேலை செய்து பின் எப் பி ஐ யில் வேலை செய்யும் Barun அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் சிபிஐயில் சேருகிறார். அவர் இந்த விசாரணையில் இறங்க , கிடைக்கும் தடயங்களை வைத்து அர்ஷத் அடியாள் மூலம் தனது மனைவியை கொலை செய்தார் என கூற அர்ஷத் கைது செய்யப்படுகிறார்.